• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அடேங்கப்பா.. போதும் போதும்.. லிஸ்ட்டு பெருஸ்ஸா போய்ட்டிருக்கு.. எச்.ராஜா போட்ட அடுக்கு டிவீட்டுகள்!

|

சென்னை: ஒன்றல்ல.. ஏகப்பட்ட ட்வீட்களை மொத்தமாக போட்டு ப.சிதம்பரத்தை உண்டு, இல்லை என ஆக்கிவிட்டார்.. "கெஞ்சி கூத்தாடி.. அழாத குறையாக ஜாமீன் வாங்கியிருக்கிறார்.. ஜாமீன்தான் கிடைத்தது.. விடுதலை இல்லை.. தண்டனைக் கைதியாக்கி திரும்பவும் ப.சிதம்பரத்தை ஜெயிலுக்கு அனுப்பினால்தான் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்" என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

இதற்காக ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்வதும், அந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்வதும் என தொடர்ந்து நடந்து வந்தது. இந்த சமயத்தில் ப.சிதம்பரத்திற்கு உடம்பு சரியில்லாமலும் போய்விட்டது.

குடியுரிமை சட்ட திருத்தம் LIVE: தமிழகம் முழுக்க திமுக போராட்டம் தொடங்கியது

கொசுவலை

கொசுவலை

இதை சுட்டி காட்டியபோதும், சிறையில் தேவையான அடிப்படை வசதிகளை வேண்டுமானால் செய்து தரலாம். ஆனால் ஜாமீன் தரமுடியாது மறுக்கப்பட்டது. இந்த சமயத்தில்தான், எச்.ராஜா ஒரு ட்வீட் போட்டிருந்தார். "மீன் கிடையாது. வலை தரலாம். சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடையாது அதற்கு பதிலாக சிறையில் கொசுவலை கொடுக்க நீதிமன்றம் உத்தரவு" என்று கிண்டலான பதிவு போட்டிருந்தார்.

ட்வீட்கள்

இதன்பின்பு சில தினங்களில் சிதம்பரத்துக்கு ஜாமீனும் கிடைத்தது.. ஜாமீனில் வெளிவந்து ப.சிதம்பரத்தின் செயல்பாடுகள் குறித்து எச்.ராஜா மறுபடியும் பல ட்வீட்களை ஒரே நேரத்தில் போட்டுள்ளார். அவைகளில் அவர் சொல்லி உள்ளதாவது: "சுதந்திரப் போராட்டத்தில் வ.உ.சி. சுமார் 6 வருட காலம் சிறைவாசம் அனுபவித்தார். சிறையில் செக்கிழுத்து எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தார். அவர் விடுதலையாகி வெளியே வந்தபோது சிறைவாசலில் அவரது மனைவி, சுப்ரமணிய சிவா உள்பட நான்கு பேர்களே இருந்தனர்"

வசதிகள்

"கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, சுமார் 15 நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்த ப.சிதம்பரம் ஊழல் வழக்கில் கைதானார். சிறையில் கட்டில், தலையணை, வெஸ்டர்ன் டாய்லெட், டி.வி., வீட்டிலிருந்து சாப்பாடு என எல்லா வசதிகளையும் கேட்டுப் பெற்றார்"

"சிறைவாசம் அவரது உடல் நலனை மிகவும் பாதித்துவிட்டது என்றும் அதனால் எட்டு கிலோ எடை குறைந்துவிட்டது என்றும் அவருடைய வழக்கறிஞர்கள் அழாத குறையாக கெஞ்சி, கூத்தாடி ஜாமீன் பெற்றனர்."

விடுதலை?

"கிடைத்தது ஜாமீன் தான். ஏதோ வழக்கிலிருந்து விடுதலையாகி வந்தது போலவும் சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்று விடுதலையாகி வந்தது போலவும் அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்க ஒரு கூட்டம்!"

"ஜாமீனில் வெளிவந்த பிறகு இந்த வழக்கு சம்பந்தமாக பொது நிகழ்ச்சிகளில் பேசவோ, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்தது"

அறிவுஜீவி

"சிதம்பரம் பெரிய அறிவு ஜீவியாயிற்றே.. வழக்கு பற்றித்தானே பேசக் கூடாது என்றவர், பத்திரிகையாளர்களை அழைத்து பிரதமர் மோடி மீது புழுதி வாரி இறைத்துள்ளார். நமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது என்று கண்ணீர் வடிக்கிறார்"

யோக்கியதை

"ஊழல் வழக்கில் கைதாகி, வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது இன்றைய பொருளாதார நிலை பற்றி பேச ப.சிதம்பரத்திற்கு எந்த யோக்கியதையும் கிடையாது"

"எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் நான் அமைச்சராக சிறப்பாக பணியாற்றியுள்ளேன் என்று சந்தடி சாக்கில் குறிப்பிடுகிறார். ‘நான் நிரபராதி' என்று சொன்னாலே நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும்"

ஜனநாயகம்

"சுதந்திரம் பெற்றது முதல் 50 ஆண்டுக்காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி செய்த அலங்கோலத்தை சீர்செய்யவே பல ஆண்டுகள் ஆகும்." "ப.சிதம்பரத்தை தண்டனைக் கைதியாக்கி சிறைக்கு அனுப்பினால் மட்டுமே ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்" என்று அடுத்தடுத்த ட்வீட்களை போட்டுள்ளார் எச்.ராஜா.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
bjp national secreatary h raja has criticized congress senior leader p chidambaram and his conditional bail
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more