சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீரன் சின்னமலையே திப்பு சுல்தானுடன் இணைந்துதானே போரிட்டாருங்கண்ணா...!

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவினர் தினுசு தினுசா கிளப்பும் விவகாரங்கள் எல்லாமே அடேங்கப்பா ரகங்களாக இருக்கின்றன.

கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா அரசு சார்பாக நடைபெற்று வந்தது. இதை தற்போதைய முதல்வர் எடியூரப்பா ரத்து செய்திருக்கிறார்.

H Raja tweets on Dheeran chinnamalai

திப்புசுல்தான் மத மாற்றம் செய்தவர்; இந்துக்களை படுகொலை செய்தவர்; இஸ்லாமிய மதவெறியர் என்றெல்லாம் சகட்டுமேனிக்கு முத்திரை குத்தி தள்ளுகின்றனர் பாஜக நிர்வாகிகள். பாஜகவினரின் இந்த ஆவேசம் அடங்குவதற்குள் இன்றைய பொழுது விடிந்துவிட்டது.

இன்று காலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, சிப்பாய் கலகத்துக்கு முன்னரே விடுதலைப் போரை நடத்திய தீரன் சின்னமலை நினைவுநாளை இன்று நினைவு கூறுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

இங்குதான் விசித்திரமான குழப்பம் வந்து நிற்கிறது.. தீரன்சின்னமலை வரலாற்றின் பக்கங்களில் எப்படி இடம்பெறுகிறார்? முஸ்லிம் மதவெறி பிடித்தவராக கூறப்படும் ஹைதர் அலி மற்றும் திப்புசுல்தானுடன் இணைந்து போரிட்டு வெள்ளையரை விரட்டியடித்தவர் என்று அல்லவா வரலாறு சொல்கிறது.

ஆக திப்பு சுல்தான் வேண்டாம்; திப்பு சுல்தானுடன் இணைந்து போரிட்ட தீரன் சின்னமலை மட்டும் வேண்டும் என்கிறது பாஜக. அதேபோல் ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் இல்லாது போயிருந்தால் அல்லது மதவெறியர்களாக இருந்திருந்தால் வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும் நமக்கு இல்லாமலே போயிருப்பார்கள் என்கிறது வரலாறு.

ரொம்பக் குழப்பமா இருக்குல்ல.. அப்படித்தான் இருக்குமோ கொஞ்ச காலத்துக்கு!!

English summary
BJP National secretary H Raja tweets on Dheeran Chinnamalai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X