சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணா பல்கலை.யில் பகவத் கீதை விவகாரம்...காலையிலேயே வெள்ளைச்சாமி பாட ஆரம்பிச்சிட்டாருப்பா!

Google Oneindia Tamil News

Recommended Video

    அண்ணா பல்கலை.யில் பகவத் கீதை விவகாரம்: எச். ராஜா ட்வீட் -வீடியோ

    சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் பகவத் கீதையை தத்துவவியல் பாடத் திட்டத்தில் சேர்த்ததை திமுக எதிர்ப்பதை சுட்டிக்காட்டி பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, திமுகவுக்கு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

    பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதை எதற்கு? திருக்குறளை விட உலகப் பொதுமறை வேறு உண்டா? என்ற வாதத்தை முன்வைத்து அண்ணா பல்கலைக் கழகத்தில் பகவத் கீதையை பாடமாக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பகவத் கீதையை விருப்பப் பாடமாக மட்டுமே தேர்வு செய்யலாம் என கூறப்பட்டது.

    H Raja tweets on Row over Bhagavad Gita in Anna University

    இது தொடர்பாக முதல்வர் எடப்பாடியுடன் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா ஆலோசனை நடத்தியிருந்தார். ஆனால் பாஜக தரப்பில் பகவத் கீதையை ஏன் பாடமாக வைக்கக் கூடாது என பதில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இன்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

    அண்ணா பல்கலைக்கழகம் உபநிஷத், கீதை, வேதங்கள், பிளேட்டோ & பேக்கன் ஆகியவற்றை அறிமுகப்படுத்திய பிறகு திமுக & இடதுசாரிகள் தமிழ்நாட்டில் சமஸ்கிருத திணிப்பு என்று கூச்சலிடுகிறார்கள்.

    ஆனால் பிளேட்டோ & பேக்கன் மீது ஏன் எந்த எதிர்ப்பும் இல்லை?அது கிருத்துவ மதத்தைச் சார்ந்தது என்று தானே! இவ்வாறு எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.

    அவரது இந்த பதிவுக்கு ட்வீட்டிஸ்டுகள் காரசார பதில்களைக் கொடுத்து வருகின்றனர். @devadevaraj என்ற ட்வீட்டிஸ்ட், பிளாட்டோவோட காலம் கி.மு. நான்காம் நூற்றாண்டுன்னு வரலாறு சொல்லுது. தனக்கு நானூறு வருசம் கழிச்சு பிறந்த கிறிஸ்துவையும், அவர் பெயரால் உருவான மதத்தின் போதனையையும் பிளாட்டோ எப்படி பண்ணிருப்பாரு? என கேள்வி கேட்டிருக்கிறார்..

    English summary
    BJP National Secretary H Raja tweets on the row over the Bhagavad Gita in Anna University.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X