சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமல்.. ஹெச் ராஜா.. ஸ்ரீபிரியா டுவிட்டரில் வாய் சண்டை.. ஹெச் ராஜாவுக்கு ஸ்ரீ பிரியா கொடுத்த பதிலடி

Google Oneindia Tamil News

சென்னை: மும்பை பாந்த்ராவில் வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்சனைக்காக மத்திய அரசை பால்கனி அரசு என்று கமல் விமர்சித்ததுக்கு பதிலடி கொடுத்தார் ஹெச்.ராஜா. தற்போது ஹெச்.ராஜாவின் கருத்துக்கு ஸ்ரீப்ரியா கடும் பதிலடி கொடுத்துள்ளார். இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க ஏப்ரல் 14ம் தேதி முடியவிருந்த 21 நாட்கள் ஊரடங்கை மே 3-ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

ஏப்ரல் 14-ம் தேதி ஊரடங்கு முடிய இருந்த நிலையில் அன்று காலையில் மோடி வெளியிட்டார். ஆனால் ஊரடங்கு முடிந்து எப்படியும் ஊருக்கு போய்விடலாம் என்று நினைத்திருந்த மும்பைச் சேர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள், ஏராளமானோர் மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் குவிந்தனர். ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியதுடன் ரயில்கள் இயக்கப்படாது என்றும் சொன்னதால் ஆத்திரமடைந்தனர்.

உயிரை பணயம் வைத்து பணி செய்யும் எங்களை நிரந்தரம் செய்யுங்கள்.. தூய்மை பணியாளர்கள் கோரிக்கைஉயிரை பணயம் வைத்து பணி செய்யும் எங்களை நிரந்தரம் செய்யுங்கள்.. தூய்மை பணியாளர்கள் கோரிக்கை

தொழிலாளர்கள் அவதி

தொழிலாளர்கள் அவதி

இதனால் அவர்கள் அங்கு போராட்டம் நடத்தினர். சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள், தங்களுக்கு போதிய உணவு கிடைக்கவில்லை என்றும் தங்குமிடம் வசதியும் செய்து தரப்படவில்லை என்றும் சொந்த ஊருக்கு அனுப்பினால் உயிர் பிழைப்போம் என்று கூறி போராடினார்கள். அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அனைவருக்கும் உணவும் தங்குமிடமும் தருவதாக உறுதி அளித்தது. ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் அவர்களைத் தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர். இந்த வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகியது.

கமல் கண்டனம்

கமல் கண்டனம்

இந்த தடியடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், "அனைத்து பால்கனி மக்களும் தரையைக் கூர்ந்து கவனித்து கவனித்து பாருங்கள். முதலில் டெல்லி, தற்போது மும்பை. புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினை என்பது டைம் பாமை போன்றது. கொரோனாவை விட மிகப்பெரிய இந்தப் பிரச்சினையை வெடிப்பதற்கு முன்பே செயலிழக்கச் செய்தல் வேண்டும். பால்கனி அரசு தரையில் நடப்பவற்றையும் கவனிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

பால்கனி பையன்

கமலின் இந்த ட்வீட்டைக் கண்டு கோபம் அடைந்த பாஜக தேசிய செயலாளர் த ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில், "பால்கனி அரசா? இந்த அரசு அடித்தட்டு மக்களின் ஆதரவோடு 3ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால், தனது 65 ஆண்டுக்காலத்தைப் பணம் ஈட்டுவதில் கழித்த ஒரு பால்கனி பையன் இன்று ஏழைகளுக்கு 1.7 லட்சம் கோடி கொடுத்த அரசைப் பற்றி உளறுகிறார். அவமானம்" என்று கூறியிருந்தார்.

உங்கள் ட்வீட்டா

ஹெச்.ராஜாவின் இந்தப் பதிவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த நடிகை ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் தனது பதிவில், "ஹெச் அவர்களே.. இது உங்கள் ட்வீட்டா அல்லது உங்கள் அட்மினின் ட்வீட்டா?. ஹெச் அவர்களே, என்னுடைய தலைவர் தன் கடின உழைப்பால் பணம் ஈட்டினார், யாரையும் ஏமாற்றும் வழியில் வந்தவர் அல்ல. நல்லது. என்னுடைய ட்வீட்டில் கமெண்ட் செய்ய வேண்டுமென்றால் முதலில் மரியாதை கொடுங்கள். அதன்பிறகு உங்கள் துதியைப் பாடுங்கள். தயவுசெய்து நகைச்சுவை வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

English summary
H raja was this tweeted by you or your admin? attacks sripriya after hraja blame kamal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X