சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் இடைத்தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்: நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்

Google Oneindia Tamil News

Recommended Video

    H Vasantha Kumar: நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்- வீடியோ

    சென்னை: நாங்குநேரி சட்டசபை உறுப்பினர் பதவியை ஹெச் வசந்தகுமார் ராஜினாமா செய்துள்ளார்.

    நாட்டின் 17வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த ஹெச் வசந்தகுமார் போட்டியிட்டார். கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட வசந்தகுமார் அமோக வெற்றிபெற்றார்.

    இதைத்தொடர்ந்து நாங்குநேரி சட்டசபை உறுப்பினர் பதவியை அவர் இன்று ராஜினாமா செய்தார். இதுதொடர்பான விலகல் கடிதத்தை சபாநாயகர் தனபாலிடம் வசந்தகுமார் இன்று அளித்தார.

    ஐஸ்.. ஐஸ்.. மோடி ஐஸ்.. 50% ஆஃபர்.. போனா வராது.. சூரத்தை கலக்கும் மோடி முகம் பதியப்பட்ட குல்ஃபி! ஐஸ்.. ஐஸ்.. மோடி ஐஸ்.. 50% ஆஃபர்.. போனா வராது.. சூரத்தை கலக்கும் மோடி முகம் பதியப்பட்ட குல்ஃபி!

    வசந்தகுமார் நன்றி

    வசந்தகுமார் நன்றி

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாங்குநேரி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுமா என்பது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    வசந்தகுமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ பதவி காலியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

    மீண்டும் இடைத்தேர்தல்

    மீண்டும் இடைத்தேர்தல்

    அதோடு ஒரு தொகுதி காலியானால் அந்த தொகுதிக்கு அடுத்த 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி அடுத்த 6 மாதத்திற்குள் தமிழகத்தில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

    தயாராகும் தமிழகம்

    தயாராகும் தமிழகம்

    தற்போதுதான் தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு இடைத்தேர்தலை சந்திக்க தமிழகம் தயாராகிவருகிறது.

    English summary
    H Vasantha Kumar has resigned Nanguneri MLA post. H Vasanthakumar wins in Kanniyakumari Loksabha election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X