சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது.. விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய மனு வாங்குறோமா.. வசந்தகுமார் காட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: விவசாய கடன் தள்ளுபடிக்கு வசந்த் & கோ -வில் மனு வாங்கப்படுவதாக தவறானசெய்தி பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கன்னியாகுமரி தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எச். வசந்தகுமார் கூறியுள்ளார்.

விவசாய கடன் தள்ளுபடிக்கு வசந்த் & கோ -வில் மனு வாங்கப்படுகிறது என்று சமூக வலைதளமான வாட்சாப் மற்றும் பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதற்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், வசந்த் & கோ உரிமையாளருமான வசந்தகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். அதோடு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

H Vasanthakumar refutes whatsapp message on Vasanth and Co

காங்கிரஸ் தேர்தல் சமயத்தின்போது தாங்கள் வென்றால் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தது. இந்நிலையில் தென்னிந்தியாவில் ஒரு சில மாநிலங்கள் தவிர பிற இடங்களில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாவை வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளரும், வசந்த் & கோ கடைகளின் உரிமையாளருமான வசந்தகுமார் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக வாட்சாப் மற்றும் ஃபேஸ் புக் போன்றவற்றில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது முக்கிய அறிவிப்பு: வங்கிகளில் மக்கள் விவசாய அடிப்படையில் வைத்திருக்கும் கடன்கள் முழுவதும் தள்ளுபடியாக இருப்பதால் அனைவரும் தங்கள் அருகாமையில் உள்ள வசந்த் & கோ நிறுவனத்தில் வருகிற 30-05-19 க்குள் வங்கி கணக்குப் புத்தகம், மற்றும் ஆதார் கார்டு போன்றவற்றை எடுத்து நேரில் சென்று படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என்று அந்த செய்தி கூறியது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த செய்தி பொய் என்று வசந்தகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், மேற்கண்ட செய்தி தற்பொழுது வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. இச்செய்தி உண்மையல்ல.

பொது மக்கள் மேற்கொண்ட பொய் செய்தியை நம்ப வேண்டாம். தோல்வியின் விரக்தியில் பாஜகவினர் செய்யும் பித்தலாட்ட வேலை. இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Newly elected Kanyakumari MP H Vasanthakumar has refuted a whatsapp message on Farm loan waiver.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X