சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்க இருந்துடா வர்றீங்க நீங்கெல்லாம்.. கொரோனாவை வச்சு உங்களை காலி செய்ய காத்திருக்கும் கூட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் பிரச்சனையால் உலகெங்கிலும் பீதியால் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து அவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி சுரண்டுவதற்கான வழியைக் ஹேக்கர்கள் மற்றும் சைபர் கிரிமினல்கள் கண்டறிந்துள்ளனர்.

Recommended Video

    Corona Virus : பரவும் கொரோனா..அச்சத்தில் ஐடி நிறுவன ஊழியர்கள்..

    கொரோனா வைரஸ் உலகெங்கிலும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. 5300 பேரை பலிகொண்டு, ஒரு லட்சத்து 50 பேரை பாதித்ததுள்ள கொரோனா வைரஸ் தொற்றை உலக சுகாதார அமைப்பு உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் உடல் ரீதியாக சிதைத்து வரும் குழப்பம் போதாதென்று , இப்போது உலகில் ஆன்லைன் சாம்ராஜ்யத்தையும் அழித்து வருகிறது.

    ஹேக்கர்கள் மற்றும் சைபர் கிரைமினல்கள் உலகெங்கிலும் பீதியால் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி சுரண்டுவதற்கான வழியைக் கண்டறிந்துள்ளனர்.

    கொரோனா வைரஸ்.. திருச்சியில் இருந்து செல்லும் விமான சேவைகளில் அதிரடி மாற்றம்.. சில சேவைகள் ரத்து கொரோனா வைரஸ்.. திருச்சியில் இருந்து செல்லும் விமான சேவைகளில் அதிரடி மாற்றம்.. சில சேவைகள் ரத்து

    தகவல்கள் திருட்டு

    தகவல்கள் திருட்டு

    அனைவருக்கும் உள்ள கொரோனா வைரஸின் பயத்தைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் மற்றும் பிற சைபர் குற்றவாளிகள் மக்களின் தகவல்களைத் திருடுவதற்கான வழியைக் கண்டறிந்துள்ளனர். COVID-19 ஐ கண்காணிக்க பல நிறுவனங்கள் டாஷ்போர்டுகளை உருவாக்கியுள்ளன. ஆனால் இப்போது, ​​கணினிகளில் தீம்பொருளை புகுத்த ஹேஷர்கள் இந்த டாஷ்போர்டுகளைப் பயன்படுத்துவதற்கான வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.

    வரைபடம் இருக்கும்

    வரைபடம் இருக்கும்

    கொரோனா வைரஸ் பரவியது தொடர்பான முக்கிய தகவல்கள் இருப்பதாகக் கூறும் மின்னஞ்சல்களை ஹேக்கர்கள் அனுப்புவதோடு, கொரோனா வைரஸைக் கண்காணிப்பதற்கான வரைபடங்களை வைத்திருப்பதாகக் கூறும் ஒரு வலைத்தளத்திற்கு உங்களை அனுப்புகிறார்கள் அல்லது அதற்கான பயன்பாட்டிற்கான பதிவிறக்க இணைப்பையும் அனுப்புகிறார்கள்.

    ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை

    ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை

    அந்த வலைத்தளம் உங்கள் உள்நுழைவு விவரங்களை கேட்கும் அல்லது உங்கள் கணினியில் ஒரு பயன்பாட்டைப் பதிவிறக்கச் சொல்கிறது. ஆனால் அப்படி ஹேக்கர்கள் இதுவரை அனுப்பி வந்த படம் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது. இது COVID-19 எங்கெல்லாம் உள்ளது என்பதற்கான கண்காணிப்பு வரைபடமாகும். உண்மையான வரைபடத்தைப் போலவே போலியாக உருவாக்கி அந்த தீம்பொருளை விற்கும் ஹேக்கர்களை பற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் எச்சரித்துள்ளது.

    வைரஸ் வந்திடும்

    வைரஸ் வந்திடும்

    தங்கள் வலைத்தளத்திலுள்ள வரைபடத்தையும், ஆர்கிஜீஸால் பராமரிக்கப்படும் வரைபடத்தையும் மட்டுமே நம்ப வேண்டும் என்றும் தங்கள் வரைப்படம் என்று யாராவது போலியான வரைப்படத்தை அனுப்பினால் நம்ப வேண்டாம் என்றும். அதை டவுன்லோடு செய்தால் உங்கள் கணிணியில் வைரஸை பரப்பி அந்தரங்க தகவல்களை திருடுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் அப்படி ஏதேனும் உங்களுக்கு இமெயில் வந்தால் உடனே காவல்துறைக்கு புகார் அளியுங்கள் என்று எச்சரித்துள்ளது.

    என்ன செய்யும்

    என்ன செய்யும்

    கொரோனாவைரஸை பயத்தை வைத்து ஹேக்கர்கள் பயன்படுத்தப்படும் மென்பொருள் AZORult என அழைக்கப்படுகிறது, பீதியான விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதை வைத்து பணம் பறிப்பதற்காக முதன்முதலில் 2016 இல் கண்டுபிடிக்கப்பட்டது. கிரிப்டோகரன்ஸ்கள் மற்றும் பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட உங்கள் கணினியிலிருந்து உங்கள் மொத்த தகவல்களையும் திருட இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. AZORult மென்பொருள் உங்கள் கணிணியில் உங்களுக்கே தெரியாமல் ரகசிய கணக்கை உருவாக்கி உங்களின் அனைத்து திருடும் தன்மை கொண்டது.

    அதிகார்வ வலைதளங்கள்

    அதிகார்வ வலைதளங்கள்

    குழப்பமான இந்த நேரத்தில், பீதி அடையாமல் இருப்பது முக்கியம். கொரோனா வைரஸ் குறித்த உண்மையான மற்றும் நம்பகமான தகவல்களுக்கு உங்கள் ஊரில் உள்ள மருத்துவ அதிகாரிகளை அணுகுங்கள் உலக சுகாதார நிறுவனம் போன்ற அதிகாரப்பூர்வ நிறுவனங்களின் வலைதளத்தில் உள்ள ஆன்லைன் மருத்துவ ஆதாரங்கள் மட்டுமே நம்பகமானவையாக இருக்கும். மற்ற எதையும் நம்பாதீர்கள்.

    English summary
    coronavirus fear: Hackers and cybercriminals have found a way to exploit panic-stricken people around the world by stealing their sensitive personal information.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X