சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹஜ் பயணம் மேற்கொள்வது எப்படி? பாதுகாப்பான வழி எது?.. வழிகாட்டும் goimomi.com நிறுவனம்!

ஹஜ் பயணம் செய்யும் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு அடிப்படை உதவிகளை செய்யும் வகையில் goimomi.com நிறுவனம் மூலம் சென்னையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: ஹஜ் பயணம் செய்யும் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு அடிப்படை உதவிகளை செய்யும் வகையில் goimomi.com நிறுவனம் மூலம் சென்னையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது.

ஹஜ் பயணம் செய்யும் இஸ்லாமிய மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கவே, goimomi.com நிறுவனம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, தமிழ்நாடு ஹஜ் சர்விஸ் சொசைட்டி, தமிழ்நாடு ஹஜ் ஒருங்கிணைப்பு அமைப்பு ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து goimomi.com நிறுவனம் ஆக்கபூர்வமான பணிகளை செய்து வருகிறது.

Hajj Awareness Programme conducted by goimomi.com to safeguard Hajj Aspirants.

இந்த நிலையில் இதுகுறித்து ஹஜ் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் கடந்த வாரம் கூட முக்கிய நிகழ்ச்சி ஒன்று நடந்து இருக்கிறது. மார்ச் 26ம் தேதி சென்னையில் ஹஜ் ஹவுசில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு ஹஜ் விதிமுறைகள், அரசு கொடுக்கும் சலுகைகள், விதிமுறைகள், நம்பகமான டிராவல்ஸ் நிறுவனங்கள், இணைய பக்கங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. goimimo.com நிறுவனம் இதுகுறித்த முக்கிய அம்சங்களை பயணிகளிடம் விளக்கியது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதற்கட்டமாக 500 பேர் வரை கலந்து கொண்டார்கள். இந்த goimimo.com பக்கத்தில் அனுமதி பெற்ற நம்பகமான ஹஜ் ஒருங்கிணைப்பாளர்கள், டிராவல் குழுக்கள் மட்டுமே உள்ளனர்.
இதனால் ஹஜ் பயணம் செய்யும் மக்கள் நேரடியாக பலன் அடைவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஹஜ் பயணிகளுக்காக, தமிழ்நாடு ஹஜ் ஒருங்கிணைப்பாளர் குழுவின் www.thoa.in என்ற இணைய பக்கமும் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஹஜ் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஜப்பார், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் துணை தலைவர் அப்துல் ரஹ்மான், டிஎம்எம்கே பொதுச்செயலாளர் ஜனாப் எஸ் ஹைதர் அலி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய goimomi.com நிறுவனத்தின் நிறுவனர் முகமது முபாரக், ஹஜ் பயணம் என்பது இஸ்லாமியர்களுக்கான மிக முக்கியமான புனித பயணம் ஆகும். பயணம் செய்யும் வயதும், சூழ்நிலையும் கொண்ட எல்லா இஸ்லாமியர்களும் கண்டிப்பாக இங்கு பயணம் மேற்கொள்ள வேண்டும்.

எல்லா வருடமும் 1.75 லட்சம் பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கிறார்கள். அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் இவர்கள் பயணம் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த பயணம் குறித்த பல முக்கிய விஷயங்கள் தெரிவதில்லை. சில சமயங்களில் தவறான அமைப்புகள் காரணமாக மக்கள் ஏமாறும் நிலை கூட ஏற்படுகிறது.

இதை தடுப்பதற்காகவும். மக்கள் இடையே புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே நாங்கள் இந்த அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
1st Hajj Awareness Programme conducted by goimomi.com in Chennai, along with State Hajj Committee to safe guard Hajj Aspirants.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X