சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. மாணவர்கள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் ஜூன் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையல் பத்தாம் வகுப்பு தேர்விற்கு ஏற்கனவே தேர்வு மையமாக செயல்படும் 3,825 பள்ளிகள் முதன்மைத் தேர்வு மையங்களாகவும், அவற்றோடு இணைக்கப்பட்ட 8865 பள்ளிகள் துணைத் தேர்வு மையங்களாகவும் செயல்பட உள்ளன. இதனால் மொத்தம் 12690 தேர்வு மையங்களில் 9.7 இலட்சம் மாணவர்கள் தேர்வினை எழுத உள்ளார்கள்.

Hall Ticket Issue for 10,11, 12th Class General exams in tamil nadu

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தேர்வுப் பணியில் சுமார் 2,21,654 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான பணியில் சுமார் 1,65,969 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளதாக ஏற்கனவே அரசு அறிவித்து இருந்தது.

மார்ச் 24 அன்று நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வுகளை எழுத இயலாத 36,089 தேர்வர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. எனவே மார்ச் 24 அன்று நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வுகளை எழுத இயலாத 36,089 தேர்வர்களுக்கு மட்டும் ஜூன் 18 அன்று ஏற்கனவே பிற தேர்வுகளை எழுதிய தேர்வு மையங்களிலேயே தேர்வு நடத்தப்பட உள்ளதாக முன்னதாக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. 11ம் வகுப்புக்கான எஞ்சிய தேர்வுகளும் அடுத்த சில வாரங்களில் நடத்தப்பட உள்ளன.

இந்நிலையில் 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. மாணவர்கள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தேர்வு நாளன்று பயன்படுத்தும் பொருட்டு சுமார் 43 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

English summary
Hall Ticket Issue for 10,11, 12th Class General exams in tamilnadu. students can download http://dge.tn.gov.in website
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X