சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இது அல்வா பட்ஜெட்".. நறுக்குன்னு ஒரு கருத்தை.. சுருக்கென சொன்ன கமல்ஹாசன்!

Google Oneindia Tamil News

சென்னை: நறுக் & சுருக்கென கமல் ஒரு வரி சொல்லி உள்ளார்.. மத்திய பட்ஜெட் மக்களுக்கு அல்வா கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக ட்வீட் போட்டு கருத்தை பதிவு செய்துள்ளார்.

2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

halwa for people, mnk leader kamalhasans comments on union budget

11 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியவர் மதியானம் 1.40 மணிக்குதான் முடித்தார்.. அதாவது 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு வாசித்தார். மிக நீண்ட உரை நிகழ்த்தி பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையையும், சாதனையையும் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு, எல்ஐசி-யில் மத்திய அரசின் ஒரு பங்கு விற்கப்படுவது என பல அம்சங்கள் இருந்தபோதிலும், பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

பட்ஜெட் 2020: மாத சம்பளதாரர்களுக்கு இந்த பட்ஜெட்டில் மகிழ்ச்சியான விஷயங்கள் என்ன? பட்ஜெட் 2020: மாத சம்பளதாரர்களுக்கு இந்த பட்ஜெட்டில் மகிழ்ச்சியான விஷயங்கள் என்ன?

அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பட்ஜெட் குறித்து ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், "அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது நிர்மலா சீதாராமன் பட்ஜெட் என்ற பெயரில் மக்களுக்கு அல்வா தந்துவிட்டார் என்கிறார் கமல்.

கடந்த வருடமும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, "மத்திய பட்ஜெட்டை மேலோட்டமாக பார்த்தால் நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளைப் போன்று தோற்றம் அளிக்கிறது. ஆனால் பட்ஜெட்டில் உள்ள ஓட்டைகளை பொருளாதார வல்லுனர்களால் மட்டுமே அடையாளம் காண முடியும். மத்திய அரசு தங்களுக்கு தாங்களே சுய சேவை செய்து கொள்ளும் பட்ஜெட்டாக இது இருக்கிறது. பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த பட்ஜெட்டில் எதுவுமே பேசப்படவில்லை" என்று நீண்ட பெரிய அளவிலான கருத்தை பதிவு செய்திருந்தார்.

ஆனால் இந்த முறை ஒரே வரியில் சுருக் & நறுக்கன தன் கருத்தை நிறுத்தி கொண்டுள்ளார். கமலின் இந்த ட்வீட்டுக்கு கீழே "இதுக்கு மேலயும் யாராச்சும் புரியலனு சொல்லுங்கடா பாப்போம்.. #அல்வா_பட்ஜெட்" என்று கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. மேலும் கமல் டிவீட்டை பலரும் ரீடிவீட் செய்து வருகின்றனர். படு வேகமாக கமல் டிவீட் ரீச் ஆகி ரவுண்டடித்துக் கொண்டுள்ளது.

சரி ரஜினி ஏதாவது டிவீட் போட்டிருக்காரான்னு தெரியலை.. இருங்க பார்த்துட்டு வர்றேன்.

English summary
halwa for people, makkal neethi maiya leader kamals comments on union budget
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X