• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நம்ம தவசியா இது.. உருக்குலைந்து போன அந்த கம்பீரம்.. மனம் கவர்ந்த "கருப்பன்" உணர்த்தும் பாடம்.. !

|

சென்னை: ஒவ்வொரு தனிநபரும் மதுவைம், புகையிலையையும் தவிர்க்க வேண்டும் என்பதைதான் தவசியின் புற்றுநோய் கோலம் நமக்கு எடுத்து காட்டி வருகிறது.

கம்பீரமான தோற்றம்.. கரகரத்த குரல்.. ஆனாலும் தெளிவான உச்சரிப்பு.. விரிந்து பரந்த மார்பு .. உறுதியான தோள்கள்.. வட்டமான முகம்.. அந்த முகத்தில் பாதிக்கு மேல் நரைத்து போர்த்தப்பட்டிருக்கும் பெரிய மீசை, தொங்கும் வெண்தாடி.. இதுதான் நடிகர் தவசி.

தேனி மாவட்டம் கோணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடிகர் தவசி. 'கிழக்கு சீமையிலே' தொடங்கி 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்... இப்போதைக்கு திண்டுக்கல்லில் உள்ள தனது மனைவியின் வீட்டில் வசித்து வருகிறார்.

Actor Thavasis Health condition is improving now

இந்த ஊரடங்கிற்கு முன்புவரை நல்லாதான் இருந்திருக்கிறார்.. ரஜினியின் அண்ணாத்தே படத்தில்கூட நடித்து வந்துள்ளார்.. ராசாத்தி என்ற சீரியலில் நடித்தபோதுதான், ஒரு விபத்தில் சிக்கி உள்ளார்.. திண்டுக்கல்லில் இருந்து தேனியில் உள்ள தனியார் விடுதிக்கு செல்லும் வழியில் கார் விபத்தில் சிக்கினார்.

அதற்கு பிறகு லாக்டவுன் போடப்பட்டுவிட்டது.. கொரோனா தொற்றால், ஷூட்டிங்கும் எதுவும் நடக்காமல் போய்விடவும், வீட்டிற்குள்ளேயே முடங்கிவிட்டார். இந்த இடைப்பட்ட சமயத்தில் புற்றுநோய் தீவிரம் அடைந்துள்ளது.. சடசடவென உடம்பு மெலிந்துவிட்டது.. மீசையும் இல்லாமல் எலும்பும் தோலுமாக காட்சி அளிக்கிறார்.

இவரை பற்றி, திரையுலகில் சிலர் சொல்லும்போது, "இளம் டைரக்டர்கள் ஏதாவது ஒரு சீனில் சொல்லி தந்தால், அதை அப்படியே உள்வாங்கி கொள்வார்.. மெய்மறந்து ரசிப்பார்.. அந்த டைரக்டரை அப்படியே தழுவி தோளில் தட்டி பாராட்டுவார்.

தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.. நாடக கலைஞர்களின் உபகரணங்களுக்கு அரசு பஸ்களில் கட்டணம் கிடையாதுதமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.. நாடக கலைஞர்களின் உபகரணங்களுக்கு அரசு பஸ்களில் கட்டணம் கிடையாது

வீரப்பன் போல அந்த முரட்டு மீசைதான் எங்களுக்கு இவரது அடையாளம்.. இப்போதைக்கு திமுக எம்எல்ஏ சரவணனின் ஆதரவிலும் அரவணைப்பிலும் சிகிச்சையிலும் இருந்தாலும், போதிய பணம் தேவையானதாக இருக்கிறது.. வெளிப்படையாகவே பணம் வேண்டும் என்று கோரிக்கையும் வைத்திருக்கிறார்.

முடிந்த அளவு திரட்டி கொண்டிருக்கிறோம்.. மக்களை மகிழ்விக்கும் கலைஞர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.. யார் மூலமாக பணம் அனுப்புவது என்பதைவிட அவரவர்களே உதவினால் நல்லா இருக்கும்.. அதுமட்டுமல்ல, முறையான உணவுபழக்கம், உடற்பயிற்சி இல்லாமல், தண்ணியும், புகையிலையுமாக விழுந்து கிடந்தால், என்ன நிலை ஏற்படும் என்பதற்கு உதாரணம்தான் தவசி.. அந்த பழைய மிடுக்கு அவருக்கு வரவேண்டும் என்கிறார்கள்.

"தற்போது அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது... ஆபத்து இல்லைன்னு சொல்லிட்டாங்க.. எல்லாரும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்... அதுபோதும்" என்கிறார் தவசியின் மூத்த மகள் முத்தரசி.

English summary
Actor Thavasis Health condition is improving now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X