அடேயப்பா.. அடுத்த 3 நாட்களுக்கு செம மழைதான்.. வெளியான அசத்தல் அறிவிப்பு.. எங்கனேன்னு பாருங்க
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பே, நேற்று முதலே அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்லில் 5 நாட்களுக்கு கனமழை - வானிலை மையத்தின் குட் நியூஸ்

காரைக்கால்
அதன்படி, நேற்றைய தினம், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியிருந்தது.

அறிவிப்பு
இந்நிலையில், இன்றைய தினம், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.. குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.. நாளை 3 ம் தேதி மற்றும் நாளை மறுநாள் 4ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுட்டெரித்த வெயில்
இதனிடையே, நேற்றைய தினம், சிதம்பரம் பகுதியில் நேற்று காலை முதலே வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் வெளியே சுற்ற முடியாமல் வீடுகளுக்குள்ளே இருந்தனர். வெளியே சுற்றித்திரிந்த சிலர், தலையில் துண்டு, கைக்குட்டைகளை அணிந்தபடியும், குடை பிடித்தபடியும் சென்றனர்... ஆனால், மாலை 4 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு, குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்ய தொடங்கியது... அடுத்த கொஞ்ச நேரத்தில் பலத்த மழையாக கொட்டியது..

ஸ்ரீமுஷ்ணம்
கிட்டத்தட்ட 1 மணி நேரம் பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது... இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்களும், மழையில் நனைந்தபடியே செல்லும்படி நேரிட்டடது.. அதேபோல், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாலை திடீரென மழை பெய்தது... இந்த மழையால், வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.