சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குற்றால சீசனுக்கு செல்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..மதுரை- செங்கோட்டைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கம்

Google Oneindia Tamil News

சென்னை:

மதுரை - செங்கோட்டை - மதுரை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் ஜூலை 1 முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்செந்தூர் - திருநெல்வேலி - திருச்செந்தூர் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

Happy News for those going to Courtallam season Madurai-Red Fort extra trains

தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (06663) மதுரையிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மாலை 03.20 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06664) காலை 11.50 மணிக்கு புறப்பட்டு மாலை 03.35 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

2. திருநெல்வேலி - செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்:

திருநெல்வேலி - செங்கோட்டை - திருநெல்வேலி பகுதிக்கு இரண்டு ஜோடி சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. அதன்படி திருநெல்வேலி செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06681) திருநெல்வேலியிலிருந்து காலை 09.10 மணிக்கு புறப்பட்டு காலை 11.25 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.

இதே மார்க்கத்தில் மற்றொரு திருநெல்வேலி செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06687) திருநெல்வேலியிலிருந்து மதியம் 01.50 மணிக்கு புறப்பட்டு மாலை 04.15 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06658) செங்கோட்டையிலிருந்து மதியம் 02.55 மணிக்கு புறப்பட்டு மாலை 05.20 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இதே மார்க்கத்தில் மற்றொரு செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06684) செங்கோட்டையிலிருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

இந்த ரயில்கள் திருநெல்வேலி டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காரைக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவண சமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

3. திருச்செந்தூர் - திருநெல்வேலி - திருச்செந்தூர் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்:

திருச்செந்தூர் - திருநெல்வேலி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06405) திருச்செந்தூரில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.00 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் திருநெல்வேலி - திருச்செந்தூர் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06409) திருநெல்வேலியில் இருந்து மாலை 04.05 மணிக்கு புறப்பட்டு மாலை 05.45 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும்.

இந்த ரயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சினாவிளை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம் மற்றும் செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

English summary
Southern Railway has announced that the Madurai-Red Fort-Madurai special train will run from July 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X