சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்.. சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படுவது எப்போது? அதிகாரிகள் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மதுக்கடைகள் திறக்கப்படாமல் உள்ளது. சென்னையில் தற்போது கட்டுப்பாட்டு பகுதிகள் வேகமாக குறைந்து வரும் நிலையில், வரும் ஜூன் மாதத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக டாஸ்மாக் வட்டாரங்கள் சொல்கின்றன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் வியாழக்கிழமை ஒரே நாளில் 827 பேர் பாதிக்கப்பட்டனர்.. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19372 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் 559 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் தினமும் 500க்கும் அதிகமானோருக்கு தொற்று பரவி வருகிறது. சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலானதாக உள்ளது.

ஒரே நாளில் கொரோனாவால் 12 பேர் மரணம்.. 11 சென்னையில் நடந்தது.. உயிரிழப்பின் ஷாக் பின்னணி ஒரே நாளில் கொரோனாவால் 12 பேர் மரணம்.. 11 சென்னையில் நடந்தது.. உயிரிழப்பின் ஷாக் பின்னணி

ராயபுரம் மண்டலம்

ராயபுரம் மண்டலம்

அதேநேரம் கொரோனா பரவல் என்பது குறிப்பிட்ட பகுதிகளில் தான் அதிகமாக உள்ளது. பல இடங்களில் 14 நாட்களுக்கு அதிகமாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. அப்படி கொரோனா தொற்று பாதிக்காத பல பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. சென்னையில் தற்போதைய நிலையில் ராயபுரம், திருவிநகர், உள்பட சில பகுதிகளில் தான் கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகமாக உள்ளது, மற்ற பகுதிகளில் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகள் குறைந்து வருகிறது. அண்ணாநகர், வளசரவாக்கம், தேனாம்பேட்டையில் ஒற்றை இலக்கத்தில் குறைந்துவிட்டது.

டாஸ்மாக் திறப்பு

டாஸ்மாக் திறப்பு

சென்னையில் கொரோனா கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்களாம். தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் குறிப்பிட்ட அளவிற்கே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மே 16ம் தேதி முதல் சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற பகுதிகளில் 3,700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.

சென்னையில் 800 கடைகள்

சென்னையில் 800 கடைகள்

சென்னைக்கு அருகே உள்ள பொன்னேரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை சென்னையில் 800 டாஸ்மாக் கடைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடைகள் மூலம் நாள் தோறும் 30 முதல் 50 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டதால் மதுபானங்கள் அனைத்தும் தேக்கம் அடைந்துள்ளதாம்.

Recommended Video

    விஸ்கி விலை ஏறிப் போச்சு.. சாராயத்தை ஊத்து.. காரைக்காலுக்குப் படையெடுத்த குடிகாரர்கள்!
    அதிகாரிகள் தகவல்

    அதிகாரிகள் தகவல்

    இதனால் கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறார்களாம். தனிநபர் இடைவெளியை பின்பற்ற வைக்க தேவையான புதிய உத்தரவுகளை வரையறுப்பது குறித்தும் ஆலோக்கிறார்களாம். டாஸ்மாக் கடைகளில் அதற்கு தேவையான நடவடிக்களை செய்ய அறிவுறுத்தப்பட உள்ளதாம். ஜூன் மாதத்தில் இருந்து சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க அதிக வாய்ப்புள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.

    English summary
    tasmac liquor shops may open from june in ehennai outof contaiment zones
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X