சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜடேஜா சிக்ஸ் அடிக்கும் முன்.. 4 பந்துகள் முடிந்ததும்.. பாண்டியா செய்த காரியம்! அரண்ட ரசிகர்கள்! ஏன்?

Google Oneindia Tamil News

சென்னை: சிஎஸ்கே அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா நடந்து கொண்ட விதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒருவழியாக பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஐபிஎல் 2023 சீசன் நிறைவு பெற்றுள்ளது. தோனியின் கடைசி சீசனாக கருதப்படும் இந்த தொடரை சிஎஸ்கே வென்று கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதோடு 5 முறை கோப்பையை சிஎஸ்கே கைப்பற்றி உள்ளது.

இதன் மூலம் மும்பை அணியின் ரெக்கார்டை சிஎஸ்கே அணி சமன் செய்துள்ளது. நேற்று சிஎஸ்கே டாஸ் வெல்ல குஜராத் முதலில் பேட்டிங் செய்தது. 39 பந்துகள் பிடித்த சாகா 54 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் கில் 20 பந்தில் 39 ரன்கள் எடுத்தார், ஆனால் அதிரடி குறையாமல் ஆடிய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் 96 ரன்களை 47 பந்துகளில் எடுத்தார். 8 சிக்ஸ், 6 பவுண்டரி என்று சிஎஸ்கே அணியை இவர் புரட்டி எடுத்தார்.

Hardik Pandyas reaction on 19.4th ball goes trending during the CSK IPL final against Gujarat Titans

சிஎஸ்கே அணியை இவரின் பேட்டிங்தான் கதறவிட்டது. இவரின் ஆட்டம்தான் சிஎஸ்கே அணிக்கு எதிராக மாறியது. கடைசியில் ஹர்திக் பாண்டியாவும் 12 பந்தில் 21 ரன்கள் எடுக்க குஜராத் அணி 20 ஓவரில் 214-4 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இவ்வளவு பெரிய ஸ்கோரை எடுத்து சிஎஸ்கே அணி வெற்றிபெறுமா என்ற சந்தேகம் பலருக்கும் நிலவியது.

ஏனென்றால் மைதானம் குஜராத் அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே சமயங் பிட்ச் பேட்டிங் பிட்ச், மழை காரணமாக பந்து வழுக்கி செல்லும், வெளியே பீல்டிங் செய்ய கடினமாக இருக்கும் என்பன போன்ற காரணங்கள் சிஎஸ்கேவிற்கு சாதகமாக இருந்தது. மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக ஆட்டமும் சுருக்கப்பட்டது. 20 ஓவரில் 170 ரன்கள் எடுக்க வேண்டும் என்று டிஎல்எஸ் முறையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்து திரில் வெற்றிபெற்றது.

சிஎஸ்கே அணியில் கான்வே 47, ரஹானே 27 எடுக்க கடைசியில் டேஜா - துபே இருவரின் ஆட்டமும் நேற்று சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இருப்பினும், ஜடேஜா ( 6 பந்தில் 15 ) மற்றும் சிவம் துபே ( 21 பந்தில் 32* ) எடுத்தனர்.இருவரின் ஆட்டம் சிஎஸ்கேவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

என்ன நடந்தது? :

கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. இதில் முதல் பந்தில் ரன் எதுவும் செல்லவில்லை. அதற்கு அடுத்து வரிசையாக 3 ரன்கள் சென்றன. 4 பந்துகளில் வெறும் 3 ரன்களை மட்டுமே மோஹித் சர்மா கொடுக்க ஹர்திக் பாண்டியா குஷியானார்.

Hardik Pandyas reaction on 19.4th ball goes trending during the CSK IPL final against Gujarat Titans

கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா மேட்ச் முடிந்துவிட்டது.. நாம் வெற்றிபெற்றுவிட்டோம் என்பது போல ரியாக்சன் கொடுத்தார். வெற்றிபெற்றுவிட்டோம் என்பது போல அவர் சிரிக்க தொடங்கினார்.

அவரால் சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் தோல்வி அடைந்துவிட்டோம் என்பது போல முகத்தை வருத்தத்தோடு வைத்துக்கொண்டு கடவுளை வேண்ட தொடங்கினர். இந்த நிலையில்தான் ஜடேஜா சிக்ஸ், பவுண்டரி அடித்து மேட்சை மாற்றினார். இதையடுத்து ஹர்திக் பாண்டியா முகம் அப்படியே மாறியது. அவரின் ரியாக்சன் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது .

இதை நெட்டிசன்கள் பலரும் ஷேர் செய்து ஹர்திக் பாண்டியா அவசரப்பட்டு கொண்டாடிவிட்டார் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

English summary
Hardik Pandya's reaction on 19.4th ball goes trending during the CSK IPL final against Gujarat Titans
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X