சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமமுகவில் இருந்து சசிகலா ஓரம் கட்டப்படுகிறாரா? டிடிவி தினகரன் அதிரடி விளக்கம்!

அமமுகவில் இருந்து சசிகலா ஓரம்கட்டப்பட்டுவிட்டார் என்பது தொடர்பாக வெளியான செய்திகளுக்கு தற்போது அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சசிகலா ஓரம் கட்டப்படுகிறாரா? - தினகரன் விளக்கம்- வீடியோ

    சென்னை: அமமுகவில் இருந்து சசிகலா ஓரம்கட்டப்பட்டுவிட்டார் என்பது தொடர்பாக வெளியான செய்திகளுக்கு தற்போது அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளராக தற்போது டிடிவி தினகரன் பொறுப்பேற்று இருக்கிறார். இது தொடர்பாக நடந்த உறுப்பினர் கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    Has Sasikala Sidelined in AMMK party? - Here are the TTV Dinakarans explanations

    அதேபோல் கட்சியின் எதிர்காலம் குறித்தும் இதில் பல விஷயங்கள் பேசப்பட்டது. இதையடுத்து இன்று டிடிவி தினகரன் உட்பட அமமுகவின் முக்கிய உறுப்பினர்கள் பெங்களூர் சென்று சசிகலாவை சந்தித்தனர். சசிகலாவை சந்தித்த பின் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அதில், நான் அனைத்து முடிவுகளையும் சசிகலாவை அணுகிதான் எடுத்து வருகிறேன். சசிகலாவிற்கு தெரியாமல் கட்சியில் எதுவும் நடக்கவில்லை. இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் சசிகலாவின் ஒப்புதலுடன்தான் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது ஹைகோர்ட் ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது ஹைகோர்ட்

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சசிகலா ஓரம்கட்டப்படவில்லை. அமமுகவை பதிவு செய்ய அனைவரும் விரும்பினோம். இந்த விருப்பம் சசிகலாவிற்கும் இருந்தது. இதனால் சசிகலா ஓரம் கட்டப்பட்டுவிட்டதாக கருத கூடாது.

    தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக வரும். இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும். இடைத்தேர்தல் தோல்வியால், தமிழகத்தில் ஆட்சி மாற்ற ஏற்பட போகிறது என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    Has Sasikala Sidelined in AMMK party? - Here are the TTV Dinakaran's explanations for the question.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X