சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்கே முகிலன்.. தமிழகம் முழுக்க வலுக்கும் ஏக்கக் குரல்.. தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் குமுறல்

காணாமல் போன முகிலனுக்காக புதிதாக ஹேஷ்டேக் உருவாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    போராளி முகிலனின் மனைவி குமுறல், 6 நாட்களாக மர்மம்!

    சென்னை: முகிலன் காணாமல் போனதையடுத்து #WhereIsMugilan என்று ஒரு ஹேஷ்டேக்கே உருவாகிவிட்டது. இதில் ஏராளமானோர் முகிலன் எங்கே என்று ஆவேசத்துடன் கேட்டு வருகிறார்கள்.

    சமூக செயற்பாட்டாளரும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்தான் முகிலன்! கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு தொடங்கி ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் விவகாரம் என மண்ணை பாதிக்கும் பிரச்சனையில் அதிகமாக போராட்டங்களில் பங்கெடுத்து முன்னெணியில் இருந்து செயல்பட்டவர்.

    இவர் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்டார். செய்தியாளர்களை சந்தித்துவிட்டு எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றவர்தான், அதன்பிறகு அவரை காணவில்லை என்று சொல்லப்படுகிறது.

     சென்னை ஹைகோர்ட்

    சென்னை ஹைகோர்ட்

    ஸ்டேஷனில் உள்ள சிசிடிவி காமிராவை ஆராய்ந்தால் முகிலன் எப்போதோ ஸ்டேஷனை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக சென்னை ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

     ஹேஷ்டேக்

    ஹேஷ்டேக்

    ஆனால் காணாமல் இத்தனை நாள் ஆகியும் முகிலன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது சம்பந்தமாக தமிழக அரசை கண்டித்தும், கோரிக்கை விடுத்தும் பலர் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
    இப்போது #WhereIsMugilan என்று ஒரு ஹேஷ்டேக்கே உருவாகிவிட்டது. இதில் கனிமொழி எம்பி, திமுகவின் டிஆர்பி ராஜா போன்றோர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

    காவல்துறை

    கனிமொழி எம்பி தனது பதிவில், "சூழலியலாளர் தோழர் முகிலன் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு 'திட்டமிட்ட அரசின் சதி' என்பதை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்ட பின்னர், கடந்த ஒரு வாரமாக காணவில்லை. விரைவில் அவரை வெளிக்கொண்டுவர காவல்துறை துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    கருணாநிதி

    இதேபோல டிஆர்பி ராஜா தனது ட்வீட்டில், கரு.பழனியப்பன் பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் கருணாநிதி உயிருடன் இருந்திருந்தால் முகிலன் இப்படி காணாமல் போயிருக்க மாட்டார் என்று பேசியுள்ளார்.

    NO ONE
    ABSOLUTELY NO ONE
    Delivers it like @karupalaniappan
    Don't miss this one on the #Legend #கலைஞர் and the need / necessity to
    produce 1000s of #Kalaignar s 😍😍😍

    துப்பாக்கிசூடு

    இதில் தூத்துக்குடி சோபியாகூட ட்வீட் ஒன்றினை போட்டுள்ளார். அதில், ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு திட்டமிடப்பட்டது என்று ஆதாரங்களுடன் பத்திரிக்கையாளர்களை வெள்ளிக்கிழமையன்று சந்தித்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் முகிலனை அன்று இரவு முதல் காணவில்லை #Mugilan என்று பதிவிட்டுள்ளார்.

    English summary
    The new Hazhtag has been created "Where is Mugilan". In this, Many Leaders including Kanimozhi MP have expressed their views
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X