• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இதோ.. இந்த 2 போட்டோக்கள்தான்.. நாட்டின் தலையெழுத்தையே மாற்ற போகிறது.. பூரிக்கும் காங். தொண்டர்கள்

|

சென்னை: "இந்த இரு போட்டோக்கள்தான் நாட்டின் தலையெழுத்தை மாற்ற போகிறது.. மாற்றம் என்பதே மாறாதது என்று சொல்வார்களே.. அது உண்மைதான்.. பாஜக அரசுக்கு நேரம் நெருங்கிவிட்டது.. காங்கிரஸ் தன் இருப்பிடத்தை நிரூபிக்கும் நாளும் நெருங்கிவிட்டது" என்று காங்கிரஸ் தொண்டர்கள் பூரித்து சொல்கிறார்கள்.
ஹத்ராஸ் சம்பவத்துக்கு முன்பிருந்தே, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி கொண்டே இருந்தன.. ஆனாலும், நாளுக்கு நாள் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்தபடியே இருந்தன.

இந்த சமயத்தில்தான் ஹத்ராஸ் சம்பவம் நடந்து மொத்த பேரையுமே உலுக்கி எடுத்துவிட்டது.. ராகுல், பிரியங்கா களத்தில் குதித்தனர்.. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல கிளம்பி வந்தது முதலே நாட்டை ஒருவித பரபரப்பு பீடித்து கொண்டது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன்... புதிய விவசாய சட்டங்கள் குப்பையில் வீசப்படும்... ராகுல் உறுதி..! காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன்... புதிய விவசாய சட்டங்கள் குப்பையில் வீசப்படும்... ராகுல் உறுதி..!

 ராகுல்

ராகுல்

லத்தி சார்ஜ், ராகுல் நிலைகுலைந்து விழுந்தது என்று எதிர்பாராத நிகழ்வுகள் நடந்தபோதே, பாஜக சுதாரிக்க தொடங்கியது..வேண்டுமென்றே கீழே விழுந்தார், நாடகம் ஆடுகிறார் என்று ராகுல் மீது புகார் சொன்னாலும், மறுநாள்தான் இந்த சம்பவம் வீறு கொண்டு வெடித்தது.. இப்போது காங்கிரஸ் அரசியலாக்க முயற்சிக்கிறது, உபியில் ஆட்சியை பிடிக்க தந்திரம் செய்கிறது, அவர்களுக்கு தேவை நீதி இல்லை, என்ற குற்றச்சாட்டுகளை பாஜக தரப்பு முன்வைத்து வருகிறது.

நாடகம்

நாடகம்

இதுகுறித்து, பழுத்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலரிடம் பேசினோம்.. உண்மையிலேயே காங்கிரசின் நாடகம்தானா, பாஜக புகார் குறித்து கேட்டோம். அவர்கள் சொன்னதாவது: "இது நாடகம்ன்னு சொல்றாங்களே.. அதே ஊர்தானே மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.. அவங்களும் ஒரு பெண் தானே.. ஏதாவது கண்டனம் சொன்னாங்களா? தலித் பெண் இறந்து 3 நாள் ஆகியும், பாஜக தரப்பில் இருந்து அந்த குடும்பத்தை யாராவது சென்று பார்த்து ஆறுதல் சொன்னாங்களா? இவங்க போகாமல், ஆறுதல் சொல்ல சென்றவர்கள் மீது குற்றஞ்சாட்டுவது எந்த வகையில் நியாயம்?

கேரளா

கேரளா

உபியை போலவே, ராஜஸ்தான், கேரளாவில் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணை ராகுல் சென்று பார்த்தார்களா என்று கேட்கிறார்களே, அந்த மாநிலங்களுக்காவது இவர்கள் சென்று ஆறுதல் சொல்லி இருக்க வேண்டியதுதானே? அந்த போலீஸ்காரர் பிரியங்கா காந்தியின் சட்டையை பிடித்து இழுத்தது சரிதானா? இந்த அராஜக போக்கை அந்த மாநில அரசும், மத்திய அரசும் ஏற்கிறார்களா?

 ராகுல்காந்தி

ராகுல்காந்தி

பெற்றவளுக்குதான் எல்லாம் புரியும்.. அந்த அம்மாவை பிரியங்கா காந்தி, கட்டிப்பிடிச்சு அரவணைக்கும்போது எல்லாருக்குமே கண் கலங்கிடுச்சு.. இதுக்கு முன்னாடி ராகுல்காந்தி குடிசை வீடுகளில் சப்பாத்தி சாப்பிடுவதை கிண்டல் செய்த கூட்டம்தானே இது? இந்த உணர்வுகள் இவர்களுக்கு புரியாது.. இவர்கள் ஆறுதல்படுத்திய அந்த 2 போட்டோக்கள்தான் நாட்டின் அரசியல் போக்கையே மாற்ற போகிறது பாருங்கள்.

அதிகாரம்

அதிகாரம்

ஜாதி கலவரம் ஏற்படும் என்பதால் போலீஸ், அந்த பெண் உடலை நடு ராத்திரியில் எரித்து விட்டார்களாம்.. அப்படின்னா, ஜாதி கலவரத்தை கூட அடக்க முடியாத அரசாங்கம் ஆட்சி செய்து என்ன பலன்? இதுதான் ராமா ராஜ்யமா? அதிகாரத்தில் இருப்போர் எதை வேண்டுமானாலும் செய்வேன் என்றால் அப்பறம் என்ன தேச பக்தி?

 குப்பை தொட்டி

குப்பை தொட்டி

இந்த சம்பவம் மட்டுமல்ல, வேளாண் மசோதாவுக்கு மிகப்பெரிய எதிர்ப்பை காங்கிரஸ் பதிவு செய்து வருகிறது.. "காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் குப்பை தொட்டியில் வீசப்படும்" என்று ராகுல் சொல்கிறார் என்றால், விவசாயிகளின் பிரச்சனையை நேரடியாக அவர் கேட்டறிந்தவர்.

போராட்டம்

போராட்டம்

அதுமட்டுமல்ல, பஞ்சாபில், போராட்டத்தை காங்கிரஸ் கையில் எடுத்திருக்கிறது.. கட்சி நிர்வாகிகளே போராட்டங்களை ஒருங்கிணைத்து, தீவிரப்படுத்தி வருவதால், பாஜகவுக்கு மட்டுமல்ல, சிரோன்மணி அகாலிதளம், ஆம்ஆத்மி, கட்சிகளுக்கும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

 வீடியோ கான்பரன்ஸ்

வீடியோ கான்பரன்ஸ்

மஹாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா உட்பட ஏராளமான மாநில விவசாயிகளுடன், வீடியோ கான்பரன்ஸ் மூலம் ராகுல் உரையாடல் நடத்த போகிறாராம்.. ஏற்கனவே இந்த மசோதாக்களுக்கு கொந்தளிப்பை வெளிப்படுத்திய விவசாயிகள், ராகுலிடம் இதை பற்றி புலம்பி தள்ளிவிடுவார்கள்.. நிச்சயம் இந்த வீடியோ கான்பரன்சும் காங்கிரஸின் போக்கை விறுவிறுப்பாக்கும்.. இந்த ஆவேச பிரியங்கா, இந்த அதிரடி ராகுலைதான் நாங்கள் இவ்வளவு காலம் எதிர்பார்த்தோம்.. இனி காங்கிரஸ்தான்!" என்று உறுதியாக சொல்லி முடித்தனர்.

English summary
Hathras Gangrape Case: Priyanka and Rahul gandhis viral photos
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X