சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துணியால் சுற்றப்பட்ட "குழந்தை".. அரண் போல நின்று காத்த நம் போலீஸ்.. கனிமொழி பேரணியில் சுரந்த கருணை

கனிமொழியின் மெழுகுவர்த்தி போராட்டத்தில் இளம் தம்பதி மக்களை கவர்ந்தனர்

Google Oneindia Tamil News

சென்னை: கையில் துணியால் சுற்றப்பட்டிருந்த அந்த குழந்தையும், அந்த கைக்குழந்தையை நெஞ்சோடு அணைத்து கொண்டு.. போராட்டத்தில் கலந்து கொண்ட இளம் தம்பதிகளும்தான், நேற்றைய கனிமொழி நடத்திய மெழுகுவர்த்தி போராட்டத்தில் அனைவரையும் ஈர்த்தனர்.

ஹத்ராஸ் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டம் நடந்தது.. இந்த பேரணியை திமுக தலைவர் ஸ்டாலின் தீப்பந்தம் ஏந்தி தொடங்கி வைத்தார்.

Hathras rape issue: Kanimozhis candle march protest and couple image viral on socials

இதில் திமுக பொது செயலாளர் துரைமுருகன், துணை பொது செயலாளர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் எவ. வேலு, உட்பட ஏராளமான தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.. இந்த பேரணிக்கு கனிமொழி எம்பிதான் தலைமை தாங்கினார்.. சின்னமலை ராஜிவ் சிலை அருகில் புறப்பட்டு கவர்னர் மாளிகை நோக்கி பேரணி சென்றது.

ஆனால், சைதாப்பேட்டை கோர்ட் அருகே வந்தபோது, பாரிகார்டு போட்டு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்... ஆனால், அந்த தடுப்பையும் மீறி மகளிர் அணியினர் ஆவேசமாக முன்னேறி செல்ல முற்பட்டதால், தள்ளுமுள்ளு.. வாக்குவாதம்.. கைது நடவடிக்கை என நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைதாகி, அருகில் உள்ள மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு இரவிலேயே எல்லாருமே விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த பேரணியில் கவர்ந்தது ஒரு இளம் தம்பதிதான்.. ஆயிரக்கணக்கான பெண்கள் இதில் கலந்து கொண்டாலும், பேரணிக்கு முன்னணியில் நடந்து சென்ற தம்பதியையே அனைவரும் கவனித்தனர்.. இவர்கள் பெயர் செல்வேந்திரன்-புவனேஸ்வரி.. சென்னையை சேர்ந்தவர்கள்தான்.. இவர்கள் தங்களது கைக்குழந்தையுடன் பேரணியில் பங்கேற்றிருந்தனர்.

நகரவே கூடாது.. போலீஸ் வாகனத்தை மறித்து நிறுத்திய திமுகவினர்.. இறங்கி வந்த கனிமொழி.. கலைந்த கூட்டம் நகரவே கூடாது.. போலீஸ் வாகனத்தை மறித்து நிறுத்திய திமுகவினர்.. இறங்கி வந்த கனிமொழி.. கலைந்த கூட்டம்

ஒரு துணியில் குழந்தையை சுற்றியபடி, நெஞ்சோடு அணைத்தபடி புவனேஸ்வரி பேரணியில் நடந்து கொண்டிருந்தார்.. பச்சிளம் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்த பெண்ணை சுற்றி போலீசார் அரண் போல் நின்றபடி சென்றனர்... இந்த காட்சி அனைவரையும் கவர்ந்தது.. பிரியங்காவின் சட்டையை பிடித்து இழுத்து அராஜகம் செய்யும் போலீசார் மத்தியில், இப்படி கைக்குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற நம் போலீசாரின் ஈர மனசும் ஆங்காங்கே இருக்கவே செய்கிறது.

English summary
Hathras rape issue: Kanimozhis candle march protest and couple image viral on socials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X