சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி லோக்சபா தொகுதி திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில், கனிமொழி உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் விரைந்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், அடுத்த விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால்,அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்ககோரி, அத்தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன், மற்றும் அத்தொகுதியை சேர்ந்த வாக்காளர் சந்தான குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.. மக்கள் ஒரு வேட்பாளரை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக வேட்புமனுவில் வருமான விவரங்கள் கேட்கப்படும் நிலையில்,தன் கணவர் வருமானத்தை மறைத்தது தவறு எனவும், பிரச்சாரத்தின்போது ஆரத்தி எடுத்தவர்களுக்கு 2000 ரூபாய் வழங்கியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது..

HC adjourns hearing in case against election of Kanimozhi from Thoothukudi

இன்று வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் எதிர்மனு தாரராக சேர்க்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், ஏற்கனவே தமிழிசை தரப்பில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தனியாக ஒரு தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது; இந்த வழக்கையும் அதனுடன் சேர்த்து பட்டியலிடுமாறு கேட்டுக்கொண்டார்.

லாரி மோதியதாலேயே மின்கம்பம் விழுந்தது.. சிட்லபாக்கம் சேது பலி குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்லாரி மோதியதாலேயே மின்கம்பம் விழுந்தது.. சிட்லபாக்கம் சேது பலி குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த இரு வழக்குகளிலும் கனிமொழி உட்பட எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கையை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தி வழக்கு விசாரணையை வரும் 23 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்..

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை தரப்பு வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுனராக நியமிக்கபட்டிருந்தாலும், அப்பதவி வழங்க படுவதற்கு முன்னதாக கனிமொழிக்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்தார். அதனால் இந்த வழக்கு தொடர்ந்து நடத்தப்படும் என்றார்.

English summary
The Madras High Court today adjourned the hearing in the case against the election of Kanimozhi from Thoothudi on Sep.23.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X