சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீட் விவகாரம்.. தமிழக அரசின் விளக்கம் ஏற்பு.. வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, விவாதமும் நடத்தப்பட்டத்தாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது இதை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தன.

HC closes case against TN govt on NEET

இந்த வழக்கு விசாரணையின் போது, இரு மசோதாக்களும் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகவும், அதை தமிழக அரசு பெற்றுக் கொண்டு விட்டதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விஷயத்தை சட்டமன்றத்தில் கூட தெரிவிக்காதது ஏன் என விளக்கமளிக்கும் படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை பொறுத்தவரை மத்திய அரசு ஒரு உத்தரவை பிறபித்திருக்கிறது. அதனால் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவு பிறபிக்க முடியாது என கூறிய நீதிபதிகள், மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் நடைமுறை பின்பற்றவில்லை என்றால் தனி வழக்காக மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என அறிவுறுத்தினர்.

எந்த காரணங்களும் தெரிவிக்காமல், மசோதாக்கள் திருப்பி அனுப்பிப்பட்டதால், நடைமுறை நிறைவடையவில்லை என கருத வேண்டியுள்ளது. அதனால் இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறபிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு, நீண்ட விவாதமும் நடத்தப்பட்டது.

மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை தெரிவிக்கும் படி மத்திய அரசுக்கு 2017 அக்டோபர் 25ம் தேதி முதல் கடந்த மே 5 ம் தேதி வரை 11 கடிதங்கள் தமிழக அரசு அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

English summary
Madras HC has closed a case against TN Govt on NEET issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X