சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராசிபுரம் சட்டசபை தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றி செல்லும்.. ஹைகோர்ட் தீர்ப்பு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: ராசிபுரம் சட்டசபை தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றி செல்லும் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக சட்டமன்றத்திற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில், அதிமுக சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜாவும், திமுக சார்பில் முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

HC dismisses an election petition. the election of Minister V Saroja from Rasipuram constituency

இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரான அமைச்சர் சரோஜா, தி.மு.க வேட்பாளர் துரைச்சாமியை விட 9,631 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

டெட் தேர்வு உள்பட.. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெறும் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்புடெட் தேர்வு உள்பட.. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெறும் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு

இவரின் வெற்றியை எதிர்த்து தோல்வியடைந்த திமுக வேட்பாளர் வி.பி.துரைச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில், பணபட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம் செய்து தேர்தலில் டாக்டர். சரோஜா பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு மீது அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன், மனுதரார் கூறிய குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க படவில்லை எனவே ராசிபுரம் சட்டமன்ற தேர்தலில் டாக்டர். சரோஜா வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.

English summary
Madras HC dismisses an election petition filed by DMK's VP Duraisamy challenging the election of Social Welfare Minister V Saroja from Rasipuram reserved constituency in May 2016
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X