சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரம்ஜான் - 2 மணி நேரம் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி

Google Oneindia Tamil News

சென்னை: ரம்ஜான் பண்டிகை தினத்தன்று 2 மணி நேரம் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் வரும் மே 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

Recommended Video

    ரம்ஜான்: மசூதிகளில் தொழுகைக்கு அனுமதி மறுத்த சென்னை உயர் நீதிமன்றம்!
    HC dismisses plea seeking permission to hold Ramzan prayers in mosques

    ரம்ஜான் பண்டிகையன்று பள்ளிவாசல்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து 2 மணி நேரம் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி திருவாரூரைச் சேர்ந்த குத்புதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ஊரடங்கு நேரத்தில் அனைத்து மத வழிபாடுகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு பண்டிகைகள், திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    கொரோனா கிளஸ்டர்.. சென்னையில் உள்ள அந்த 34 இடங்கள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் டீம் போடும் கொரோனா கிளஸ்டர்.. சென்னையில் உள்ள அந்த 34 இடங்கள்.. அமைச்சர் விஜயபாஸ்கர் டீம் போடும் "மைக்ரோ பிளான்"

    மதுரை கிளையில்...

    இதேபோல் மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் ஷாகுல் ஹமீது என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி பிரகாஷ் தலைமையிலான பெஞ்ச் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    English summary
    The Madras High Court today dismissed a plea seeking permission to hold Ramzan prayers in mosques.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X