சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறுபான்மையினர்.. 10ம் வகுப்பு தமிழ் பாடத் தேர்வு எழுத.. 2022ம் ஆண்டு வரை விலக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வின்போது தமிழ் பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து 2022ஆண்டுவரை விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை தமிழக அரசு கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூன் 12-இல் கொண்டு வந்தது இதில் அனைத்து வகையான பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டது.

hc exempts linguistic minorities from writing sslc tamil exam

தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட பிற மொழிகளிலும் பயிலும் மாணவர்களும் பொதுத் தேர்வுகளின்போது, தமிழ் பாடத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 2015-16ஆம் கல்வியாண்டில் பிற மொழி மாணவர்கள் தமிழ் பாடத் தேர்வு எழுத விலக்களித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், வரும் கல்வியாண்டிலும் விலக்கு அளிக்கக் கோரி, மொழி சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் , அப்துல் குத்தூஸ் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அமர்வு மொழி சிறுபான்மை பள்ளிகளின் தமிழ் பாட தேர்வு எழுத 2022 ஆம் ஆண்டுவரை விலக்களித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

English summary
Madras HC has exempted linguistic minorities students from writing SSLC Tamil exam till 2022.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X