சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காவிரிக்காக போராட்டம்.. முக ஸ்டாலின் உள்ளிட்டோர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டமும், ஆா்ப்பாட்டமும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் கடந்த 2018 ஏப்ரல் 4ஆம் தேதி நடத்தின. சென்னை அண்ணா சாலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் திருநாவுக்கரசா், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன், உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனா்.

HC interim injunction to the prosecution of leaders including MK Stalin in Cauvery Management Board case

அனுமதியின்றி நடைபெற்ற தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளிலும், நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பிரிவிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணைக்கு நடைபெற்று வருகிறது இதில் சம்பந்தப்பட்டவர்கள் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது .இந்த நிலையில் வழக்கு விசாரணையை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் புலன் விசாரணை அதிகாரியே வழக்கில் புகார்தாரராக இருப்பதால் ,இது விதிகளுக்கு புறம்பானது,சட்டவிரோதமானது எனவே வழக்கு விசாரணைக்கு, தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு , சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணைக்கு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

English summary
The Madras High Court has granted an interim injunction to the prosecution of leaders including DMK leader MK Stalin and former Tamil Nadu Congress leader Thirunavukarasar in the case of the Cauvery Management Board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X