சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையை விட்டு சொந்த ஊர் போக இ பாஸ் கேட்டு மனு - அரசு பதில் தர ஹைகோர்ட் உத்தரவு

ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்கள், சென்னையை விட்டு சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீத

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா லாக்டவுனால் சென்னையை விட்டு வெளியேற விரும்பும் மக்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு உணவு, உறைவிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மக்கள் வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் இழந்து தவிக்கின்றனர். இதனால் சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த மக்கள் பலரும், ஊரை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

HC issue to notice TamilNadu government e-pass to leave Chennai for hometown

சொந்த ஊர்களுக்கு திரும்புகிறவர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த சேசுபாலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கொரோனா தொற்று நவம்பர் மாதம் வரை உச்சத்தில் இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர இதனால் உணவு மற்றும் உறைவிடத்திற்கான செலவை சமாளிக்க முடியாமல் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முயற்சித்து வருவதாகவும், அவர்களுக்கு இ பாஸ் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HC issue to notice TamilNadu government e-pass to leave Chennai for hometown

திருமணம், மரணம் மற்றும் மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே இ பாஸ் வழங்கப்படுவதால், சென்னையை விட்டு வெளியேற விரும்பும் மக்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு உணவு, உறைவிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

டீ விற்பனை செய்யும் பெண்ணுக்கு இலவச தள்ளு வண்டி.. திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் செய்த உதவிடீ விற்பனை செய்யும் பெண்ணுக்கு இலவச தள்ளு வண்டி.. திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் செய்த உதவி

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

English summary
The Tamil Nadu government has been directed to respond within a week after hearing a petition filed in the High Court seeking permission to allow people who want to leave Chennai by Corona Lockdown to return to their hometowns or provide them with food and shelter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X