சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவை சித்த மருத்துவத்தால் குணமாக்க முடியுமா? மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா என ஆய்வு செய்யக் கோரிய மனுவுக்கு, மத்திய - மாநில அரசுகளும், இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகளும் அதற்கான பதில்களும் | Dr.Aravindha Raj

    உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு 20 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 700 பேர் இந்நோயின் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர்.

    HC issues notice to Centre on Siddha Treatment for Coronavirus

    இந்நோயை குணப்படுத்த இதுவரை மருந்தோ, தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்காத நிலையில், சித்த மருத்துவத்தில் இந்நோயை குணப்படுத்த முடியுமா என ஆய்வு செய்ய இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உத்தரவிடக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துகுமார் நாயக்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், சித்த மருத்துவத்தில் வீரம், பூரம், லிங்கம், பாதரசம், ரசேந்துரம், அரிதாரம், கேஷ்டம் உள்ளிட்ட ஒன்பது வகை மூலிகைகளை சேர்த்து மருந்தாக சிறிது அருந்தினாலே, அனைத்து வகையான வைரஸ்களும் அழிக்கப்பட்டு விடும் எனக் குறிப்பிட்டுள்ளார். சித்த மருத்துவ முறையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியுமா என பரிசோதிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு மனுக்கள் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

    உலகமே பாராட்டுன ரஷ்யாவுக்கும் இந்த நிலையா.. கொரோனா நோயாளிகள் கிடுகிடு உயர்வு.. ஷட் டவுன் ஆரம்பம் உலகமே பாராட்டுன ரஷ்யாவுக்கும் இந்த நிலையா.. கொரோனா நோயாளிகள் கிடுகிடு உயர்வு.. ஷட் டவுன் ஆரம்பம்

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய பெஞ்ச், மத்திய மற்றும் மாநில சுகாதார துறை செயலாளர்களும், ஆயுஷ் அமைச்சக செயலாளரும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, உத்தரவிட்டது.

    English summary
    The Madras High Court has issued a notice to Centre on a plea for allow to Siddha Treatment for Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X