சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆமா.. இந்த கைலாசா நாட்டின் அதிபர் நித்யானந்தாவை எப்படி தொடர்பு கொள்வது?.. ஹைகோர்ட் நீதிபதி கிண்டல்

Google Oneindia Tamil News

சென்னை: கைலாசா நாட்டின் அதிபர் நித்யானந்தாவை எவ்வாறு தொடர்பு கொள்வது என உயர்நீதிமன்ற நீதிபதி கிண்டலாக கேட்டார்.

Recommended Video

    நீதிமன்றமே சொல்லியாச்சு: கைலாசாவோட அதிபதி நித்தியானந்தா!

    இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் குறித்து தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார் நித்யானந்தா. அப்போது அவதூறு கருத்துகளை தெரிவித்ததையடுத்து அவர் மீது கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ஜுன் சம்பத் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2011 ஆம் ஆண்டு கொடுத்த பேட்டிக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னர் தன் மீது அர்ஜுன் சம்பத் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

     "இங்க கோயில்தான் இருந்தது.. பாதரை கூப்டுங்க" சாந்தோம் சர்ச்சுக்குள் "விசாரணை" நடத்திய அர்ஜுன்சம்பத்

    விலக்கு

    விலக்கு

    இந்த அவதூறு வழக்கிற்காகவே கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை கடந்த 2014-ஆம் ஆண்டு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகி நித்யானந்தாவுக்கு விலக்கு அளித்திருந்தது.

    ஆஜர்

    ஆஜர்

    பல வருடங்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி எம் தண்டபாணி முன்பு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா சார்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் தன்னுடைய வக்காலத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறினார். மற்றொரு வழக்கறிஞர் நித்யானந்தா சார்பில் ஆஜராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.

    தனிநாடு

    தனிநாடு

    இதையடுத்து நீதிபதி தண்டபாணி கைலாசா என்ற தனிநாட்டை நித்யானந்தா உருவாக்கிவிட்டதாக கேள்விப்பட்டேன். ஒரு நாட்டின் அதிபரை எப்படி தொடர்பு கொள்வீர்கள் என கிண்டலாக கேட்டார். இந்த வழக்கில் நித்யானந்தா சார்பில் யாரும் ஆஜராகாததை அடுத்து நித்யானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    தேடப்படும் குற்றவாளி

    தேடப்படும் குற்றவாளி

    பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த நித்யானந்தா வெளிநாட்டில் தலைமறைவாகிவிட்டார். எனினும் அவர் அவ்வப்போது லைவில் தோன்றி சத்சங்கம் செய்து வருகிறார். இந்த நிலையில் கைலாசா என்ற நாட்டை விலைக்கு வாங்கிவிட்டதாகவும் அங்கு குடியேற பாஸ்போர்ட்களையும் தயார் செய்துள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் நித்யானந்தா. இன்டர்போல் போலீஸார் இவரை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chennai High Court Judge asks How to contact Kailasa president Nithyananda?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X