சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிறிஸ்தவ நிறுவனங்கள் குறித்த கருத்து... திரும்பப் பெற்றார் நீதிபதி வைத்தியநாதன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது என்று தெரிவித்த கருத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் வாபஸ் பெற்றுள்ளார்.

சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் மாணவ - மாணவிகள், கடந்த ஜனவரி மாதம் பெங்களூரு, மைசூரு, கூர்க் போன்ற ஊர்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். சுற்றுலா முடிந்து திரும்பியதும், 34 மாணவிகள் கையெழுத்திட்டு, சாமுவேல் டென்னிசன் மற்றும் ரவின் ஆகிய இரு பேராசிரியர்களும் பாலியல் தொல்லை அளித்ததாக கல்லூரி முதல்வருக்கு புகார் அளித்தனர்.

HC judge withdraws his comment on Christian missionaries

இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், பணிநீக்கம் செய்வது தொடர்பாக சாமுவேலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையின் போது கோரிய ஆவணங்கள், விசாரணைக்கு பின் வழங்கப்பட்டதாகவும், தன் தரப்பு வாதத்தை முன் வைக்க வாய்ப்பு வழங்காமல் இயற்கை நீதி மீறப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி வைத்தியநாதன், தற்போது கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன எனவும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து பெற்றோர் மத்தியில் நிலவுகிறது. நல்ல கல்வியை வழங்கினாலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா என்றால் அது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது என கூறியிருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கிறிஸ்துவ கல்லூரி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் , இந்த வழக்கிற்கும் நீதிபதியின் கருத்துக்கும் சம்மதமே இல்லையென தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கிறிஸ்துவ மிஷனரிசுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை உத்தரவில் இருந்து நீக்குவதாக தெரிவித்து கருத்துகளை திரும்பப் பெற்றார்.

English summary
Madras HC judge Vaidhyanatha has withdrawn his comment on Christian missionaries during a hearing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X