சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பளிச் முகத்துடன் நிர்மலா தேவி.. யார் யாரோ தொந்தரவு செய்வதாக வக்கீல் புகார்

வரும் 22-ம் தேதி மதுரை ஐகோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பேராசிரியை நிர்மலாதேவி வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பேட்டி-வீடியோ

    சென்னை: "நிர்மலாதேவி இப்போது பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். ஆனால் அவரை ஏன் போலீஸ் தேட வேண்டும்? திரும்ப திரும்ப ஏன் தொந்தரவு செய்யணும்" என்று பேராசிரியை நிர்மலாதேவி வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    சமீபத்தில் பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீனில் வெளியாகி வெளியே உள்ளார். ஜாமீன் வழங்கும்போது, ஊடகங்களுக்கு அவர் எந்தபேட்டியும் தரக்கூடாது என்று நிபந்தனையும் சேர்த்து வழங்கப்பட்டது. அதேபோல சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க இடைக்கால தடையும் உள்ளது.

    ஆனால், நிர்மலா தேவி பற்றிய செய்திகள் தமிழ் வார இதழ் ஒன்றில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிபதிகள், "ஏற்கனவே நிர்மலாதேவி நேரில் ஆஜராகி பல கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

    வந்துட்டான்.. வந்துட்டான்.. ராம்நாட்டில் சூறை காற்றுடன் கனமழை.. தமிழகம் முழுக்க மழை இருக்கு மக்களே! வந்துட்டான்.. வந்துட்டான்.. ராம்நாட்டில் சூறை காற்றுடன் கனமழை.. தமிழகம் முழுக்க மழை இருக்கு மக்களே!

     ஆஜராக வேண்டும்

    ஆஜராக வேண்டும்

    இருந்தாலும், அவரிடம் மேலும் பல சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க வேண்டி உள்ளதால் வருகிற 22-ந் தேதி மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் அறையில் நேரில் ஆஜராக வேண்டும்" என உத்தரவிட்டனர்.

    உங்களுக்கு அரசியல் தெரியுமா? அப்போ பதில் சொல்லுங்க.. பாஸ் பண்ணிட்டா கெத்துதான்!

    தெளிவு

    தெளிவு

    இந்த நிலையில், இந்நிலையில், மதுரையில் உள்ள தனது அலுவலகத்தில், நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நிர்மலாதேவியும் அங்கு இருந்தார். முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. மல்லிகைப்பூ, குங்குமம், என பளிச்சென இருந்தார். அப்போது பசுபதி பாண்டியன் பேசும்போது சொன்னதாவது:

     கொலை குற்றவாளியா?

    கொலை குற்றவாளியா?

    நிர்மலாதேவி இப்போது பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். ஆனால் அவரை ஏன் போலீஸ் தேட வேண்டும்? அவங்க என்ன தேடப்படும் கொலைக் குற்றவாளியா? பொள்ளாச்சியில பாலியல் கொடுமை நடந்துச்சே.. அதுக்கு யாரையாவது இதுவரைக்கும் கைது செய்தாங்களா?

    தொந்தரவு

    தொந்தரவு

    அதையெல்லாம் விட்டுட்டு திரும்ப திரும்ப நிர்மலா தேவியை தொந்தரவு செய்தால் என்ன அர்த்தம்? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. அது என்ன மர்மம்னு அவங்கதான் சொல்லணும். இதுல யாருமே தப்பிக்க முடியாது. நிர்மலாதேவிக்கு தொடர்ந்து தொந்தரவு தருபவர்களும் சட்டத்தின் முன்னாடி தப்பிக்க முடியாது.

     சொந்தக்காரங்க

    சொந்தக்காரங்க

    ஜாமீன் கிடைச்சும் பத்து நாள் ஆச்சு அவங்க வெளிய வர்றதுக்கே.. ஜெயில்லயும் சொந்தக்காரங்க யாரும் போய் பார்க்கல. இப்பவும் யாரும் வந்திக்கல. ஆனா மத்தவங்க ஏன் இவங்கள பார்த்து பயப்படுறாங்க, மடியில கனமில்ல வழியில பயமில்லைன்னு இருக்க வேண்டியதுதானே? 22ஆம் தேதி, நீதிபதிகிட்ட அனுமதி கிடைத்த பிறகு மீடியாக்களை அழைத்து நிச்சயம் இது பற்றியெல்லாம் நிர்மலா தேவி சொல்லுவாங்க" என்றார்.

    English summary
    Professor Nirmaldevis advocate Pasumpon Pandian says about TN gov. Madurai High court bench has ordered nirmaladevei to appear on 22nd
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X