சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவில் புகார்களை தெரிவிக்க அதிகாரிகள் செல்போன் எண்களை அறிவிப்பு பலகையில் எழுதுங்கள் ஹைகோர்ட் உத்தரவு

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அறங்காவலர்களின் பெயர், தொழில், முகவரி உள்ளிட்ட விவரங்களை 8 வாரத்தில் வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்களின் பெயர், முகவரி, தொழில், அவர்களின் தொடர்பு எண் ஆகியவற்றையும், கோவில் குறித்த புகார்களை தெரிவிக்க வேண்டிய அதிகாரிகளின் விவரங்களையும் கோவில்களின் அறிவிப்பு பலகையில் 8 வாரங்களில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அறங்காவலரின் பெயர், தொழில், சுய வருமானம், கோவிலின் பாரம்பரிய நடைமுறைகளின் ஞானம், கோவில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபடாதவரா, அரசியல் தலையீடு இல்லாமல் பணியாற்றக்கூடியவரா போன்ற விவரங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள நாளிதழ்களில் பொது அறிவிப்பாக வெளியிட்டு, கோவில் அலுவலகங்களில் பக்தர்கள் பார்வைக்கு வைக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டுமென நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராஜகோபாலசாமி குலசேகர ஆழ்வார் திருக்கோவிலில் அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

HC order Officials cell phone numbers on the notice board to lodge complaints about the temple

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.கார்த்திகேயன் தாக்கல் செய்த பதில் மனுவில், துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சில கோவில் அறங்காவலர் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவர்களின் குடும்பம் பற்றிய தனிப்பட்ட தகவலை வெளியிட முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

குட்கா: உரிமைக்குழு நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி ஹைகோர்ட்டில் மேல்முறையீடுகுட்கா: உரிமைக்குழு நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி ஹைகோர்ட்டில் மேல்முறையீடு

மேலும், குறிப்பிட்ட தகவல்களை விரும்புவோர் தகவல் உரிமை சட்டம் மூலம் கேட்டுப்பெறலாம் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீதர், பெயர் வெளியிடுவது மட்டும் போதாது என்றும், கோவில் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொடர்பு எண்ணை அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, கோவில்களின் அறங்காவலர்களின் பெயர், முகவரி, தொழில், அவர்களின் தொடர்பு எண் ஆகியவற்றையும், கோவில் குறித்த புகார்களை தெரிவிக்க வேண்டிய அதிகாரிகளின் விவரங்களையும் கோவில்களின் அறிவிப்பு பலகையில் 8 வாரங்களில் வெளியிட வேண்டுமென அறநிலைய துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

English summary
The Chennai High Court has directed the Tamil Nadu government to publish the names, addresses, occupations, contact numbers of the trustees of the temples under the control of the Hindu Temples Department and the details of the officers who have to lodge complaints about the temple on the notice boards of the temples within eight weeks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X