சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேலம் அருகே தனியார் பள்ளியில் விதிகளுக்கு புறம்பாக கட்டிடம்.. விசாரணைக்கு ஹைகோர்ட் உத்தரவு

By Sivam
Google Oneindia Tamil News

சேலம்: சேலம் மாவட்டம் தொலசம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் விதிகளுக்கு புறம்பாக கட்டிடம் கட்டப்பட்டது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், தொலசம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் சிவகாமி அம்மாள், சிவசுப்பிரமணியம் பிரைமரி, நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில், அனுமதியில்லாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால், மாணவர்கள் நலன் கருதி, பள்ளியை மூடி சீல் வைக்க கோரி ஓமலூர் தாலுகா தாரமங்கலத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

hc order to conduct inquiry into illegal construction of building at private school in Tholasampatti

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட பள்ளி விதிகளை மீறியிருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக நகர் ஊரமைப்பு துறை இயக்குனர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது குறித்து, சட்டப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

English summary
The madras High Court has directed the Regional Development Officer to conduct an inquiry into the illegal construction of a building at a private school in Tholasampatti, Salem district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X