சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரிப்பதற்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: ஊழல் குற்றச்சாட்டு நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெறும் வயதை உயர்த்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு அறிக்கை அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கற்பகம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், தமிழக அரசு அண்மையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தியுள்ளதாகவும், நேர்மையாக நியாயமாக பணிபுரிந்த அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை ஒரு ஆண்டுகள் நீட்டிப்பதில் எந்த தவறும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்... அதே வேளையில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி,ஒழுங்கு நடவடிக்கை விசாரணை நிலையில் உள்ளவர்களுக்கும் ஓய்வு பெறும் வயது நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சென்னையில் இருந்து கர்நாடகா சென்றால் முகாமில் 3 நாட்கள்- வீட்டில் 11 நாட்கள் தனிமை-எடியூரப்பா அதிரடிசென்னையில் இருந்து கர்நாடகா சென்றால் முகாமில் 3 நாட்கள்- வீட்டில் 11 நாட்கள் தனிமை-எடியூரப்பா அதிரடி

HC order to file report of case against the rising of the retirement age of corrupt civil servants

இது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்களுக்கும் எதிரானது என்றும் எனவே ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளவர்களுக்கான ஓய்வு பெறும் வரை நீட்டித்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் 2 வாரத்திற்குள் தமிழக அரசு இதுகுறித்து உரிய அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

English summary
The Madras High Court has ordered the Tamil Nadu government to file a report in the ongoing case against the raising of the retirement age of civil servants who are accused of corruption
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X