சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மனநலம் பாதித்து சாலைகளில் கைவிடப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை தர ஹைகோர்ட் உத்தரவு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சாலைகளில் கைவிடப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவும் சூழ்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் பொதுநலன் வழக்கை தொடர்ந்தார். அதில், சாலைகளில் கைவிடப்பட்ட மனநிலை பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தி முகாம்களுக்கு அனுப்ப வேண்டும் என கோரியிருந்தார்.

HC order to rescue Mental Illness persons

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது, பத்திரிகைகளில் மனநிலை பாதிக்கப்பட்டோர் சுற்றி திரிவது தொடர்பாக வெளியான செய்திகளை மனுதாரரின் வழக்கறிஞர் பிரபாகரன் சுட்டிக் காட்டினார்.

டாஸ்மாக் திறக்க முடிகிறது.. மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாதா? சென்னை ஹைகோர்ட் கேள்வி!டாஸ்மாக் திறக்க முடிகிறது.. மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாதா? சென்னை ஹைகோர்ட் கேள்வி!

இதனை விசாரித்த நீதிபதிகள், மனநிலை பாதித்து சாலைகளில் கைவிடப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை தர வேண்டும்; இது தொடர்பாக வரும் 18-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

English summary
The Madras High court today ordered to that the State Govt should rescue Mental Illness persons on roadside.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X