சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமராவதி கால்வாய் விரிவாக்கம்.. விவசாய நிலங்களுக்கு இழப்பீடு.. கலெக்டர் ஆஜராக உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அமராவதி ஆற்றின் கிளைகால்வாய் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தபட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காது தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலாளர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த 1995ஆம் ஆண்டு அமராவதி கிளை கால்வாயை விரிவாக தொடர்பாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது பெரும்பாளான விவசாயகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது இதில் 74 லட்சம் ரூபாய் இழப்பீடாக சில குறிப்பிட்ட விவசாயிகள் மட்டும் இதுவரை வழங்கவில்லை இதை எதிர்த்து ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

hc-orders-tirupur-collector-to-appear-in-court

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசே இரண்டு மாதத்தில் இழபீடு வழங்கபடும் என்று உத்ரவாதம் அளித்தது அதன் அடிப்படையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை இழப்பீடு வழங்காததால் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிவராஜ் குமாரசாமி உள்ளிட்ட 9 விவசாயிகள் சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலாளர், நில கையகப்படுத்தும் சிறப்பு ஆணையர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் 4 வாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்தார்.

English summary
Madras HC has ordered Tirupur collector to apper in person in a case against the Dt admin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X