சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முருகனை சந்திக்க நளினியை அனுமதிக்கலாமா.. தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் ஹைகோர்ட்

Google Oneindia Tamil News

சென்னை: தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலை குற்றவாளி முருகனை நளினி மற்றும் அவரது உறவினர்கள் சந்திக்க அனுமதிப்பது தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் சமீபத்தில் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டார். இதை எதிர்ப்பு தெரிவித்து முருகன் தொடர் உண்ணவிரதத்தில் இருந்து வருகிறார்.

hc orders tn govt to clarify on murugan case

அதேபோல சிறையில் முருகன் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறி அவரது மனைவி நளினியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், முருகனை தனிமை சிறையில் இருந்து விடுவிக்கக்கோரியும் அவரை அவருடைய மனைவி நளினி மற்றும் உறவினர்கள் சந்திக்க அனுமதிக்கக்கோரியும் முருகனின் உறவினர் தேன்மொழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

தலைவி படத்திற்கு தடை விதிங்க.. ஹைகோர்ட்டில் தீபா வழக்குதலைவி படத்திற்கு தடை விதிங்க.. ஹைகோர்ட்டில் தீபா வழக்கு

இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்கா ராமன் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக 2 வாரங்களில் பதிகளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

English summary
Madras HC has ordered TN govt to clarify on Murugan case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X