சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலவச வேட்டி, சேலை திட்டத்துக்காக வாங்கும் நூலின் தரம் சோதிக்கப்படுகிறதா - ஹைகோர்ட் கேள்வி

இலவச வேட்டி சேலை திட்டத்துக்காக நெசவாளர்களுக்கு தரும் நூலின் தரம் சோதிக்கப்படுகிறதா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் இலவச வேட்டி சேலை திட்டத்துக்காக நெசவாளர்களுக்கு தரும் நூலின் தரம் சோதிக்கப்படுகிறதா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தயாரிக்கப்பட்ட வேட்டி சேலைகளை தர சோதனை செய்யும்போது,நெசவாளர்களுக்கு நூல் வழங்கப்படும்போது ஏன் தர சோதனை செய்வதில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி இந்த மனுவிற்கு தமிழ்நாடு அரசின் கைத்தறி துறை செயலாளர் மற்றும் கைத்தறி இயக்குநருக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

தமிழக அரசு இலவச வேட்டி சேலைத் திட்டத்திற்கு, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, அரசால் ஒப்பந்ததாரர்கள் மூலம் தரமற்ற நூல் வழங்குவதை தடுக்கின்ற வகையில், நூல் தரத்தை சோதனை செய்ய நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட கண்காணிப்புக் குழு அமைக்க திருப்பூர் மாவட்டம் முத்தூர் விசைத்தறி நெசவாளர் சங்கத்தலைவர் கோவிந்தராஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

HC question govt Is the quality of the book purchased for the free cut and saree scheme being tested

தமிழக அரசின் இலவச வேட்டி சேலைத் திட்டத்திற்கு ஒவ்வொரு வருடமும் சுமார் ரூ. 250 கோடி அளவிற்கு நூல் வாங்கப்டுகிறது என்றும், இதில் தரமற்ற நூல் நெசவாளர்களுக்கு வழங்கப்படுவதால் தரமற்ற வேட்டி சேலைதான் உற்பத்தி செய்யக்கூடிய நிலைமை ஏற்படுகிறது என்றும், இதனால் நெசவாளர்களுக்கும் பயனாளிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக மனுதாரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா நான் முன்பு விசாரணைக்கு வந்தபோது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலகண்டன் அதிகாரிகளின் முறைகேடுகள் குறித்து ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்

தலைமறைவாக இருந்த இலங்கை தாதா ஜெமினி பொன்சேகா.. பெங்களூரில் கைது.. தமிழக போலீஸ் அதிரடி தலைமறைவாக இருந்த இலங்கை தாதா ஜெமினி பொன்சேகா.. பெங்களூரில் கைது.. தமிழக போலீஸ் அதிரடி

இதனையடுத்து நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தயாரிக்கப்பட்ட வேட்டி சேலைகளை தர சோதனை செய்யும்போது,நெசவாளர்களுக்கு நூல் வழங்கப்படும்போது ஏன் தர சோதனை செய்வதில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி இந்த மனுவிற்கு தமிழ்நாடு அரசின் கைத்தறி துறை செயலாளர் மற்றும் கைத்தறி இயக்குநருக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

English summary
The High Court has questioned the Government of Tamil Nadu. Is the quality of the yarn given to the weavers being tested for the free Vetti saree scheme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X