சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆவின் பால்.. ரூ. 360 கோடி டெண்டரை ரத்து செய்ததை தடை செய்ய ஹைகோர்ட் மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ஆவின் பால் விநியோகம் தொடர்பான 360 கோடி ரூபாய் டெண்டரை ரத்து செய்த தனிநீதிபதியின் உத்தரவில் தலையிட இருநீதிபதிகள் கொண்ட அமர்வு மறுத்துவிட்டது.

ஆவின் பாலை தமிழகம் விநியோகம் செய்ய கடந்த ஜனவரி 7 ஆம் தேதி டேங்கர் லாரிகளுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது. இந்த டெண்டரின் ஆரம்ப மதிப்பு 360 கோடி ரூபாயாகும். இந்த டெண்டருக்கு எதிராக தீபிகா டிரான்ஸ்போர்ட் நிறுவனம் தாக்கல் செய்தது

 HC refuses to stay on the order of Single bench verdict on Aavin tender

கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது இந்த டெண்டர் அறிவுப் வெளியிடப்பட்டதால் அந்த டெண்டர் அறிவிப்பை ரத்து செய்வதாக நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார்..

இந்த உத்தரவை எதிர்த்து 16 தனியார் பால் விநியோக நிறுவனங்கள் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர் . இந்த வழக்கு நீதிபதி வினித் கோத்தாரி மற்றும் நீதிபதி கார்த்திகேயன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது .

அப்போது தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து,பழைய டெண்டரை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது . இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது என மறுத்து விட்டனர்.

புதிய விதிமுறைகளோடு, அடுத்த டெண்டரை ஆவின் தான் அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 19 ம் தேதி ஒத்தி வைத்துள்ளனர்.

English summary
Madras HC has refused to stay the order of Single bench verdict on Aavin tender.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X