சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அபிராமி... அபிராமின்னு.. அபிராமியையே புலம்ப வச்சுட்டாங்களே!

அபிராமிக்கு சென்னை ஹைகோர்ட் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அபிராமி விஷயத்தில் நீதிமன்றமே கடும் ஆத்திரம்- வீடியோ

    சென்னை: ஜாமீன் தரணுமா என்ன? என்ற ரீதியில் அபிராமி விஷயத்தில் நீதிமன்றமே கடும் ஆத்திரத்தில் உள்ளது.

    அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் அபிராமியை மறந்துவிட முடியுமா என்ன? பிரியாணி கடைக்கார ஊழியர் சுந்தரத்தின் உறவால் பெற்ற பிள்ளைகளை கொன்றவர் ஆயிற்றே.

    குழந்தைகளுக்கு தந்த பாலில் மாதவிடாய் மாத்திரைகளை யாராவது கலந்து தருவார்களா? அப்போதும் காம வெறி அடங்காமல் குழந்தைகளின் மூச்சை தன் கையாலேயே நிறுத்தியவர் ஆயிற்றே!!

    அட்டூழியம்

    அட்டூழியம்

    ஜெயிலில் கம்பி எண்ண போய்விட்ட பிறகு அபிராமி பத்தின செய்திகள் குறைந்து விட்டன என்றாலும் அபிராமி செய்த அட்டூழியத்தை தமிழகம் மறக்கவே இல்லை. கைதான புதிதில் சிறையில் அவர் தற்கொலைக்கு முயன்றார் என்று சொல்லப்பட்டது.

    அழுது புலம்பினார்

    அழுது புலம்பினார்

    பிறகு வீட்டிலிருந்து யாருமே வந்து தன்னை சிறையில் பார்க்கவில்லை என்று மனம் நொந்து உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்பட்டது. அதன் பிறகு பிள்ளைகளை இப்படி கொன்னுட்டேனே என்று சிறைவாசிகளிடம் அழுது புலம்பியதாகவும் சொல்லப்பட்டது.

    அழுது புலம்பினார்

    அழுது புலம்பினார்

    பிறகு வீட்டிலிருந்து யாருமே வந்து தன்னை சிறையில் பார்க்கவில்லை என்று மனம் நொந்து உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்பட்டது. அதன் பிறகு பிள்ளைகளை இப்படி கொன்னுட்டேனே என்று சிறைவாசிகளிடம் அழுது புலம்பியதாகவும் சொல்லப்பட்டது.

    கள்ளக்காதல்

    கள்ளக்காதல்

    அதற்கு பிறகு அபிராமி என்ன செய்துகொண்டிருக்கிறார் என்றே நமக்கு எந்த தகவலும் வரவில்லை. ஆனால் எந்த தாய் கள்ளக்காதலுக்காக பிள்ளைகளை கொன்றாலும் அவர் ஒரு அபிராமியாகவே பார்க்கப்படும் நிலைக்கு நம்மை கொண்டு வந்து விட்டு விட்டார் இவர்!!

    தள்ளுபடி

    தள்ளுபடி

    இந்த வழக்கு தொடர்பாக அபிராமி செஷன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு செய்தார். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதுபோல இன்னொரு முறை ஜாமீன் கேட்டும் செஷன்ஸ் கோர்ட்டு ஜாமீனே தராமல் 2 மனுக்களையுமே தள்ளுபடி செய்தது.

    விசாரணை ஆரம்பம்

    விசாரணை ஆரம்பம்

    அதற்கு பிறகுதான் ஹைகோர்ட்டில் ஜாமீன் கேட்டு திரும்பவும் மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அபிராமி மீதான கொலை வழக்கின் குற்றப்பத்திாிகை மீது காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வெள்ளிக் கிழமை முதல் விசாரணை தொடங்க உள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    எதிர்கொள்ளட்டும்

    எதிர்கொள்ளட்டும்

    இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, "அபிராமி கீழ் கோர்ட்டில் விசாரணையை எதிர்கொள்ளட்டும்" என்றே ஒரே வார்த்தையை சொல்லி, அவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டார்.

    படணும் அவஸ்தை

    படணும் அவஸ்தை

    அவ்வளவு சீக்கிரம் ஜாமீன் தர யாருக்குமே விருப்பமில்லை. வழக்கை எதிர்கொள்ளட்டும் என்று நீதிபதி சொல்கிறார் என்றால், அபிராமி தன் தவறை இன்னும் நிறையவே உணர வேண்டியுள்ளது, அதிக பாடம் கற்கவேண்டியுள்ளது, எவ்வளவுதான் கதறினாலும் பறிபோன 2 பிஞ்சுகளின் உயிர் திரும்பி வரப்போவதில்லை என்றாலும், ஒட்டுமொத்த தமிழகத்தின் மனக்குரல் "அபிராமிக்கு இது பத்தாது.. இன்னும் அவஸ்தை படணும்" என்பதாகத்தான் உள்ளது.

    English summary
    Kundrathur abirami's Bail Petition rejected by Chennai High Court
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X