சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசதுரோக வழக்கு: வைகோவுக்கு விதிக்கப்பட்ட 1 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்து வைத்தது ஹைகோர்ட்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை: மேல்முறையீடு பற்றி கேள்வி கேட்ட நிருபர்..! ஆவேசமடைந்த வைகோ !

    சென்னை: தேசதுரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோவுக்கு விதிக்கப்பட்ட 1 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

    2009-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் வைகோ மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் அண்மையில் வைகோவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

    HC suspends Vaikos 1 year imprisonment

    அப்போதே வைகோவின் தண்டனையை 1 மாதம் நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி சாந்தி தீர்ப்பில் கூறியிருந்தார். இத்தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்தார்.

    ராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்! ராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்!

    இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வைகோவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதனிடையே வரும் 25-ந் தேதி ராஜ்யசபா எம்.பி.யாக வைகோ பதவி ஏற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Madras high court suspended one year imprisonment ordered by trial court against MDMK General Secretaray and Rajyasabha MP Vaiko.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X