சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு:ரத்து செய்யக் கோரும் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் மனு-அக்.16-ல் தீர்ப்பு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் குமார் எம்.பி. தேனி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரும் மனு மீது அக்டோபர் 16-ல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத், 76,319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

HC to deliver verdict on Oct 16 on Raveendranath Kumar’s Plea in election victory case

அதில், ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், பணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளிவைக்கவில்லை' என்று கூறியிருந்தார்.

ராகுல் காந்தியுடன்...அமர்ந்து இருந்த பஞ்சாப் அமைச்சருக்கு...கொரோனா தொற்று உறுதி!!ராகுல் காந்தியுடன்...அமர்ந்து இருந்த பஞ்சாப் அமைச்சருக்கு...கொரோனா தொற்று உறுதி!!

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என ரவீந்திரநாத் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான வாதங்களைக் கேட்ட நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்ற ரவீந்திரநாத்தின் மனு மீதான தீர்ப்பை, அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

English summary
Madras High court will deliver a verdict on AIADMK MP Raveendranath Kumar’s Plea in election victory case on Oct. 16.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X