சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐடி துறையில் ஒரு அதிரடி.. 1.8 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஐபிஎம் சாப்ட்வேர்களை வாங்கும் ஹெச்சிஎல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    1.8 பில்லியன் டாலர் மதிப்பில் ஐபிஎம் சாப்ட்வேர்களை வாங்கும் ஹெச்சிஎல்!- வீடியோ

    சென்னை: நாட்டின் 3வது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான, ஐபிஎம் சாப்ட்வேர் புராடக்ட்ஸ்களை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

    ஹெச்.சி.எல். நிறுவன வரலாற்றிலேயே இதுதான் அதிக மதிப்பிலான கொள்முதலாக பார்க்கப்படுகிறது. இதனால் தகவல் தொழில்நுட்ப துறையே பரபரத்துக் கிடக்கிறது.

    2019ம் ஆண்டு பாதிக்குள்ளாக இந்த கொள்முதல் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எந்த மாதிரியான பொருட்கள்

    எந்த மாதிரியான பொருட்கள்

    அப்ளிகேஷன் டெவலப்மென்ட் பாதுகாப்புக்கான, ஆப்ஸ்கேன் பாதுகாப்பான டிவைஸ் மேனேஜ்மென்ட்டுக்கான பிக்பிக்ஸ், மார்க்கெட்டிங் ஆட்டோமேஷனுக்கான யுனிகா, ஆம்னி சேனல் இகாமர்சுக்கானது, டிஜிட்டல் அனுபவத்திற்கான வெப்சைட் இமெயில் மற்றும் லோ-கோட் ரேப்பிட் அப்ளிகேஷன் வடிவமைப்பிற்கான, நோட்ஸ் & டோமினோ மற்றும் ஒர்க்ஸ்டீம் கூட்டிணைவுக்கான கனெக்ஷன்கள் உள்ளிட்டவைதான் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

    சிறப்பான வாய்ப்பு

    சிறப்பான வாய்ப்பு

    ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவன தலைவர் & தலைமைச் செயல் அதிகாரி சி.விஜயகுமார் இதுபற்றி கூறுகையில், பாதுகாப்பு, மார்க்கெட்டிங் மற்றும் காமர்ஸ் ஆகிய அதிகமாக வளரும் துறைகளில் நாங்கள் கொள்முதல் செய்துள்ளோம். இந்த புராடக்ட்களின் பெரிய அளவிலான வீச்சு, மார்க்கெட் மற்றும் தொழில்துறையில் சிறந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கும் என்று நம்புகிறோம்.

    வளர்ச்சி

    வளர்ச்சி

    புராடக்ட் கண்டுபிடிப்புகள் மீதான முதலீடு மற்றும் வாடிக்கையாளர் சார்ந்த செயல்பாடுகள் போன்றவை எங்களுக்கு நல்ல வளர்ச்சியை பெற்றுத்தரும் என உறுதியாக நம்புகிறோம். இந்த புராடக்ட்கள் எங்களின் மோட்-1 மற்றும் மோட்-2 சேவைகளுக்கும் உதவும் என்று எதிர்பார்க்கிறோம்.

    ஐபிஎம் கருத்து

    ஐபிஎம் கருத்து

    "கடந்த நான்கு வருடங்களில், ஒருங்கிணைந்த திறமை மேம்பாட்டுக்காக நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து முதலீடு செய்து வருகிறோம். பிசினசுக்காக, சைபர் பாதுகாப்புக்காக, நிதிச் சேவைகளுக்காக செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட செயல்பாடுகளில், எங்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது எனவே ஐபிஎம் இந்த பிரிவுகளில் தலைவராக உள்ளது" என்கிறார் ஐபிஎம் ஆய்வுப்பிரிவு, மூத்த துணை தலைவர் ஜான் கெல்லி.

    English summary
    The country’s third largest software services firm HCL TechnologiesNSE -1.24 % has announced that it is acquiring select IBM software products for $1.8 billion. The acquisition which is the largest in the history of HCL, is expected to close by mid-2019.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X