சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு!

இன்போசிஸ் நிறுவனத்தில் உயர் அதிகாரிகள் இரண்டு பேர் நிறைய முறைகேடுகளை செய்து இருப்பதாக பரபரப்பு புகார் வைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ

    சென்னை: இன்போசிஸ் நிறுவனத்தில் உயர் அதிகாரிகள் இரண்டு பேர் நிறைய முறைகேடுகளை செய்து இருப்பதாக பரபரப்பு புகார் வைக்கப்பட்டுள்ளது.

    இன்போசிஸ் நிறுவனம் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக முக்கிய பணியாளர்கள் பலர் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.

    இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சலீல் பார்கே மற்றும் தலைமை நிதி அதிகாரி நிலன்ஜன் ராய் ஆகியோர் மீதுதான் பணியாளர்கள் புகார் வைத்து இருக்கிறார்கள். இது தொடர்பாக இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்குனர்களுக்கு புகார் சென்றுள்ளது.

    தமிழர்களுக்கு குட் நியூஸ்.. கனடாவில் கலக்கும் ஜஸ்டின் ட்ரூடோ.. கணிப்புகளை தவிடு பொடியாக்குகிறார்தமிழர்களுக்கு குட் நியூஸ்.. கனடாவில் கலக்கும் ஜஸ்டின் ட்ரூடோ.. கணிப்புகளை தவிடு பொடியாக்குகிறார்

    என்ன புகார்

    என்ன புகார்

    இன்போசிஸ் பணியாளர்கள் பலர் இந்த புகாரை அளித்துள்ளனர். இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சலீல் பார்கே மற்றும் தலைமை நிதி அதிகாரி நிலன்ஜன் ராய் இருவரும் நெறியற்ற விஷயங்களை செய்கிறார்கள். நிதி தொடர்பான மோசடிகளை செய்து வருகிறார்கள். விற்பனை தொடர்பான தவறான கணக்குகளை காட்டுகிறார்கள்.

    அழுத்தம்

    அழுத்தம்

    எங்களையும் தவறான கணக்கு காட்டும்படி அழுத்தம் அளிக்கிறார்கள். இன்போசிஸ் நிறுவனத்தின் பணத்தில்தான் சலீல் சுற்றுலா செல்கிறார். அவர் சக பணியாளர்களை மிக மோசமாக நடத்துகிறார் என்று புகாரில் கூறி உள்ளனர். இதற்கான ஆடியோ, வீடியோ, மெயில் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர்.

    மதராசி

    மதராசி

    அதேபோல் சென்னையை சேர்ந்த இன்போசிஸ் இயக்குனர்களான டி சுந்தரம், டி என் பிரக்லாத் ஆகியோரை பற்றியும் சிஇஓ சலீல் மோசமாக பேசி உள்ளார் . அவர்கள் இருவரும் மதராசிகள், அவர்களின் பேச்சை எல்லாம் கேட்க வேண்டாம். அவர்கள் நிறைய விதிகள் சொல்வார்கள். எதையும் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம், என்று கூறி உள்ளனர்.

    இதுதான் சர்ச்சை

    இதுதான் சர்ச்சை

    இன்போசிஸ் சிஇஓ மற்றும் சிஎப்ஓ இருவரும் இப்படி பேசியதுதான் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இயக்குனர்கள் குழுவிற்கு கொடுத்த புகார் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அமெரிக்காவில் புகார் கொடுப்பவர்களின் பாதுகாப்பு அமைப்பு ஒன்றிற்கும் இன்போசிஸ் நிறுவனத்திற்கு எதிராக புகார் பறந்துள்ளது.

    பதில் என்ன

    பதில் என்ன

    இந்த தொடர் சர்ச்சைகளால் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 16% சரிந்து இருக்கிறது. என்எஸ்இ சந்தையில் மொத்தமாக 16% பங்குகள் சரிந்துள்ளது. காலையில் 10% சரிவுடன் தொடங்கிய இன்போசிஸ், தற்போது 16% ஆக குறைந்துள்ளது. இன்று மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இழப்பு

    மேலும் இழப்பு

    இதனால் அந்த நிறுவனத்திற்கு மேலும் பல கோடி இழப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள். இந்த பாதிப்பு சில நாட்களில் முடிந்துவிடாது. இது பல நாட்கள் நீடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    English summary
    He is a Madrasi: Infosys CEO and CFO's unethical work creates 16% loss for the company in Share market .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X