சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் ஸ்டாலின் முகத்தில் சிரிப்பே இல்லை.. என்னாச்சு.. விசாரித்த "புள்ளிகள்".. மா.சு நச் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் முகத்தில் பெரிதாக சிரிப்பை பார்க்கவே முடிவது இல்லை என்று பலர் விசாரிப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சட்டப்பேரவை நிகழ்வுகள் 23-06-2021

    தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி தற்போது நடந்து வருகிறது. ஆளுநர் உரையில் இருந்தே கூட்டத்தொடரில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ள நிலையில், நேற்று முக்கியமான விவாதங்கள் நடந்தது.

    தமிழ்நாட்டில் ஏற்படும் சிறிய சிறிய மின்தடை தொடங்கி கொரோனா தடுப்பு பணிகள் வரை பல்வேறு விஷயங்கள் குறித்து நேற்று அவையில் காரசார விவாதங்கள் நடந்தன.

    என்ன

    என்ன

    இந்த விவாதத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசிய விஷயம் ஒன்று சட்டசபையில் கவனம் ஈர்த்தது. அதில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வரும் சில புள்ளிகள், முதல்வரிடம் முன்பு இருந்த புன்சிரிப்பு இப்போது இல்லையே. என்ன ஆச்சு? தேர்தல் வெற்றிக்கு பின் முகத்தில் சிரிப்பை பார்க்க முடியவில்லையே என்று முதல்வரிடம் விசாரித்து உள்ளனர். பல்வேறு தலைவர்கள், முக்கியஸ்தர்கள் இப்படி விசாரித்துள்ளனர்.

    பதில்

    பதில்

    இதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டசபையில் பதில் அளித்தார். அதில், தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் மிக முக்கியமான கட்டத்தில் பதவி ஏற்று இருக்கிறார். கொரோனா கேஸ்கள் உச்சத்தில் இருந்த போது அவர் முதல்வராக பதவி ஏற்றார். அவர் ஏற்று இருக்கும் பதவி மலர் கிரீடம் கிடையாது.

    மலர் கிரீடம்

    மலர் கிரீடம்

    அவர் பதவி ஏற்று இருப்பது முள் கிரீடம். கொரோனா உச்சத்தில் இருந்து இப்போதுதான் குறைந்துள்ளது. கொரோனா இன்னும் மொத்தமாக நம்மை விட்டு நீங்கவில்லை. அப்படி இருக்கும் போது முதல்வர் ஸ்டாலின் எப்படி சிரிக்க முடியும். எப்படி சந்தோசமாக மலர்ச்சியோடு இருக்க முடியும். கொரோனா வார்டுக்கே நேரடியாக சென்று பார்க்கும் அளவிற்கு முதல்வர் கொரோனா தடுப்பில் கவனமாக இருக்கிறார்.

    தடுப்பு

    தடுப்பு

    கொரோனா இப்போதுதான் குறைய தொடங்கி உள்ளது. தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் தினசரி தொற்று எண்ணிக்கை 7,427 ஆக குறைந்துள்ளது. இது வரும் வாரங்களில் மேலும் குறைந்து, தமிழ்நாடு கொரோனாவில் இருந்து விடுபடும். தமிழ்நாடு விரைவில் மாற்றம் அடையும், என்று மா. சுப்பிரமணியன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Health Minister Ma Subramanian explains why Tamilnadu Chief Minister M K Stalin does not smile often.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X