சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபாஷ்..! வெறும் 19 நாட்களில்.. ஒரு கோடி பேருக்கு கொரோனா வேக்சின்.. மருத்துவ துறை செயலாளர் பெருமிதம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், மாலை வரை மட்டும் சுமார் 15.23 லட்சம் பேருக்கு வேக்சின் செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலகின் அனைத்து நாடுகளுக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்றால் அது கொரோனா தான். எந்தவொரு நாட்டினாலும் கொரோனாவை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.

'மாபெரும் சாதனை..' 3 நாள் ஸ்பேஸ் சுற்றுலா.. பத்திரமாக பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்'மாபெரும் சாதனை..' 3 நாள் ஸ்பேஸ் சுற்றுலா.. பத்திரமாக பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்

சில நாடுகளில் குறிப்பிட்ட காலத்திற்கு வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருப்பதைப் போலத் தோன்றினாலும். அது குறிப்பிட்ட காலத்தில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்குவது பெரும் தலைவலியாக உள்ளது.

பூஸ்டர் டோஸ்

பூஸ்டர் டோஸ்

தற்போதைய சூழலில் கொரோனா வேக்சின் மட்டுமே கொரோனாவை தடுக்கும் ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளை மிகத் தீவிரமாகச் செயல்படுத்து வருகிறது. குறிப்பாக ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகள் பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்தும் முடிவெடுத்து வருகின்றன. வல்லரசு நாடுகளில் மக்கள்தொகையில் 50% மேற்பட்டோருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் வேக்சின் பணிகள் நடைபெற்று வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் வேக்சின் செலுத்தப்பட்ட நிலையில், பின்னர் அது படிப்படியாக அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டது. கடந்த மே 1ஆம் தேதி முதல் 18+ அனைவருக்கும் வேக்சின் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் வேக்சின் செலுத்தி முடிக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

மெகா வேக்சின் முகாம்

மெகா வேக்சின் முகாம்

அதேபோல தமிழ்நாட்டிலும் வேக்சின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்று மாநிலத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேக்சின் போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மக்கள் அதீத ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தியதால் இலக்கை தாண்டியும் பலருக்கு வேக்சின் போட முடிந்தது. அன்று மட்டும் மாநிலத்தில் 29 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.

Recommended Video

    தலைநகர் சென்னை சூப்பர் சாதனை..! மெகா தடுப்பூசி முகாமில் 2 லட்சம் பேருக்கு கொரோனா வேக்சின்
    2ஆவது மெகா வேக்சின் முகாம்

    2ஆவது மெகா வேக்சின் முகாம்

    முதல் மாபெரும் வேக்சின் முகாம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2ஆவது மெகா வேக்சின் முகாம் கடந்த 17ஆம் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் அது செப். 19 - இன்றைக்கு மாற்றப்பட்டது. இன்றும் தமிழ்நாடு முழுவதும் மக்கல் அதீத ஆர்வத்துடன் வேக்சின் செலுத்திக் கொண்டனர். இதனால் பல பகுதிகளில் இலக்கை காட்டிலும் கூடுதல் நபர்களுக்கு வேக்சின் போடப்பட்டது.

    15.23 லட்சம் பேருக்கு வேக்சின்

    15.23 லட்சம் பேருக்கு வேக்சின்

    இந்நிலையில் மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன், "தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற முகாம்களில் மாலை 6 மணி வரை 15.23 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் எவ்வித தட்டுப்பாடுகளும் இல்லாமல் தொடர்ந்து கிடைத்தால், இன்னும் சிறப்பாக வேக்சின் பணிகளை மேற்கொள்ள முடியும்.

    19 நாட்களில் ஒரு கோடி வேக்சின்

    19 நாட்களில் ஒரு கோடி வேக்சின்

    செப். 1ஆம் தேதி முதல் 19 நாட்களில் மட்டும் மாநிலத்தில் இதுவரை 1 கோடி பேருக்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் இதுவரை தமிழ்நாட்டில் 4.12 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்தார். முன்னதாக, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் பேடி, ஒரே மாதத்தில் சென்னையில் உள்ள அனைவருக்கும் வேக்சின் போடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Second Mega vaccination camp in Tamilnadu. Tamilnadu Corona vaccination latest news.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X