சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூடு பிடிக்கும் கோடை.. தமிழகம் முழுவதும் வெளுக்கும் வெயில்.. திருத்தணியில் 104 டிகிரி பாரன்ஹீட்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று வெயில் 100 டிகிரியை தாண்டியது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று வெயில் வறுத்தெடுத்து விட்டது.

இன்னும் அக்னி நட்சத்திரமே ஆரம்பிக்கவில்லை.. அதற்குள் பல்வேறு இடங்களில் வெப்பம் அதிகரித்து மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இன்று பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி தாண்டி கொளுத்தி எடுத்துவிட்டது.

Heat as mercury hits above 100 degrees

திருத்தணியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகி இருக்கிறது. சேலத்தில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வேலூர், மதுரை மாவட்டத்தில் 102.5 டிகிரி பாரன்ஹீட்டும், கரூர் 102 டிகிரி பாரன்ஹீட் மற்றும் தர்மபுரி, திருச்சி மாவட்டங்களில் தலா 101 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி உள்ளது. சென்னையில் 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது.

ஓடும்போதே தீ பற்றி எரிந்த ரயில் பெட்டி.. துரிதமாக செயல்பட்ட பணியாளர்.. பலநூறு பேரை காப்பாற்றினார்! ஓடும்போதே தீ பற்றி எரிந்த ரயில் பெட்டி.. துரிதமாக செயல்பட்ட பணியாளர்.. பலநூறு பேரை காப்பாற்றினார்!

இந்நிலையில், வளி மண்டலத்தில் காற்றின் சுழற்சி இல்லாததாலும், நாட்டின் மேற்கு மற்றும் வடமேற்கில் இருந்து வரும் வெப்பக் காற்றால், தமிழக வானிலையிலும் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

Heat as mercury hits above 100 degrees

குறிப்பாக 6, 7 தேதிகளில் 11 மாவட்டங்களில் அதாவது தமிழகத்தின் உள் மாவட்டங்களான திருச்சி, ஈரோடு, மதுரை, வேலூா், தருமபுரி, நாமக்கல், பெரம்பலூா், கரூா், திருவண்ணாமலை, திருப்பூா், திண்டுக்கல் அனல் காற்று வீசும் என்றும் எச்சரித்திருந்தது. அதனால் நாளைய தினம் எப்படி பொழுதை ஓட்டுவதோ என்று அந்தந்த மாவட்ட மக்கள் இப்போதே பீதியில் ஆழ்ந்துவிட்டனர்.

English summary
Sun heat increased in Salem, Karur, Trichy, Dharmapuri and Chennai districts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X