சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    Chennai Weather: தமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்- வீடியோ

    சென்னை: தமிழகம் மற்றும புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பாகவே சென்னையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

    Heat will increase for the next two days: Meteorological warning

    அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் இன்னும் ஆரம்பிக்க சில நாட்கள் இருக்கும் நிலையில், குறிப்பாக தலைநகர் சென்னையில் வெயிலின் தாக்கம் என்பது சற்று அதிகமாக உள்ளது .

    இதனால், மதிய நேரங்களில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். சென்னையை பொருத்தவரையில், குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளில் தண்ணீர் இருப்பு 0.77 டிஎம்சியாக குறைந்துள்ளது.

    இதனால், அடுத்த பத்து நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி இருந்தது.

    இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    English summary
    Chennai Meteorological Center has warned that heat will increase for the next two days in Tamilnadu and Puducherry
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X