சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குனிந்து கும்பிட்டு பதவியை பெற்றது யார்?- சட்டசபையில் முதல்வரும், செந்தில்பாலாஜியும் காரசார விவாதம்

Google Oneindia Tamil News

சென்னை: குனிந்து கும்பிட்டு பதவியை பெற்றது யார் என்பது குறித்து சட்டசபையில் முதல்வருக்கும் செந்தில் பாலாஜிக்கும் காரசார விவாதம் ஏற்பட்டது.

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தொடங்கியது. அன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பிறகு, அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

ஆமா.. ஏன் எல்லாரும் திடீர்னு படையெடுத்து வர்றாங்க.. சந்தேகக் கண்ணுடன் ஓபிஎஸ்!ஆமா.. ஏன் எல்லாரும் திடீர்னு படையெடுத்து வர்றாங்க.. சந்தேகக் கண்ணுடன் ஓபிஎஸ்!

கோரிக்கை

கோரிக்கை

இந்த நிலையில் தமிழக சட்டசபை கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து கடந்த திங்கள்கிழமை முதல் அவை மீண்டும் தொடங்கியது. மின்சாரத் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.

பதவி

பதவி

அப்போது அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி கூறுகையில் தமிழகத்தின் எதிர்கால தலைமை முக ஸ்டாலின்தான். அவர் யாரிடமும் குனிந்து கும்பிட்டு பதவியை பெறவில்லை என்றார்.

போட்டி

போட்டி

இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது முதல்வர் பேசுகையில் குனிந்து கும்பிட்டு பதவியை பெற்றார்கள் என எங்களை தொடர்புபடுத்தி செந்தில்பாலாஜி பேசியது தவறு. அவர் இதுவரை எத்தனை சின்னத்தில் போட்டியிட்டார். எத்தனை கட்சியில் இருந்தார் என்பது நினைத்து பார்க்க வேண்டும் என்றார்.

காரசாரமான விவாதம்

காரசாரமான விவாதம்

அப்போது ஓபிஎஸ் கூறுகையில் ஜெயலலிதா இருக்கும்போது செந்தில் பாலாஜி எத்தனையோ முறை கும்பிட்டுள்ளார் என்றார். இப்படியாக கும்பிடு போட்டு பதவியை பெற்றது யார் என்பது குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது.

English summary
Heated Argument was done in Assembly between Senthil Balaji and CM regarding who bent and get post?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X