சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆளாளுக்கு மேயர் பதவி கேட்டு அனத்தல்.. யாரை சமாளிப்பது.. யாரை சரிக்கட்டுவது.. தவிக்கும் அதிமுக தலைமை!

சென்னை மேயர் பதவிக்கு அதிமுகவுக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    Competition for Chennai mayor post in aiadmk | மேயர் பதவிக்கு போட்டி ! தவிக்கும் அதிமுக தலைமை! தவிக்கும் அதிமுக தலைமை

    சென்னை: கூட்டணி கட்சியை சமாளிப்பதா, சொந்த கட்சியை சமாளிப்பதா என்று தெரியாமல் உள்ளது அதிமுக தலைமை.. மூத்த தலைவர்களும், முன்னாள்களும் மேயர் பதவிக்கு சென்னையை கேட்டு வருகிறார்கள்.. இதனால் திரும்பவும் கட்சிக்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

    உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர உள்ளதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டு வருகின்றன. இவ்வளவு காலம்வரை உள்ளாட்சி தேர்தல் என்றாலே அதிமுகவைவிட கொஞ்சம் கூடுதல் மாஸ் திமுகவுக்குதான்.

    எம்ஜிஆர் காலத்தில் இருந்தே உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வலிமையை யாராலும் அடித்து கொள்ள முடியாது. இது மிகப்பெரிய பலமாக இப்போதும் திமுகவுக்கு உள்ளது.

    இதுபோக, நடந்து முடிந்த தேர்தல் தோல்வியால், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால், எப்படியும் வாக்கு வங்கியை சரி செய்யும்வேலையில் திமுக இறங்கி உள்ளதாக தெரிகிறது.

    இன்று நள்ளிரவு வரைதான் கெடு.. யாரும் ஆட்சி அமைக்காவிட்டால் மகாராஷ்டிராவில் அடுத்து என்ன தெரியுமா?இன்று நள்ளிரவு வரைதான் கெடு.. யாரும் ஆட்சி அமைக்காவிட்டால் மகாராஷ்டிராவில் அடுத்து என்ன தெரியுமா?

     சென்னை

    சென்னை

    இதில், திமுகவுக்கு இணையாக களம் இறங்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் இப்போதைய ஒரே பிளானாக இருக்கிறது. இது சம்பந்தமான விவாதம் கூட நடந்தது. அப்போது சென்னை மாநகராட்சியை திரும்பவும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும், அதற்கான தேர்தல் பணியினை மும்முரமாக செய்ய வேண்டும் என்பதுமே சீரியஸ் டிஸ்கஷனாக இருந்தது.

     எம்பி தேர்தல்

    எம்பி தேர்தல்

    திமுகவுக்கு சமமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று எடப்பாடியார் விரும்புகிறார். இருந்தாலும் மேயர் பதவிக்கு ஏகப்பட்ட போட்டிகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக எம்பி தேர்தலில் தோல்வியடைந்தவர்களும் சென்னை மேயர் பதவிக்கு குறி வைத்துள்ளதாக தெரிகிறது. எம்பி தேர்தலில் சீட் கிடைக்காதவர்களும் இந்த பதவியை கேட்டு வருவதாக தெரிகிறது.

     குழப்பம்

    குழப்பம்

    நா.பாலகங்கா,வெங்கடேஷ் பாபு, ஜேசிபி. பிரபாகர், பா.வளர்மதி, கோகுல இந்திரா, முன்னாள் எம்பி ஜெயவர்தன் போன்றோர் மேயர் பதவியை கேட்டுள்ளனர்.இவர்களில் கோகுலஇந்திரா ராஜ்ய சபா சீட்டுக்காக அதிகம் முயற்சித்தவர் ஆவார். இதனால் மிகப்பெரிய சிக்கலும், குழப்பமும் அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் முதலில் கூட்டணி கட்சியை சமாளித்துவிட்டுதான், சொந்த கட்சி பற்றி கவனிக்க முடியும் என்று முடிவாகி உள்ளதாம்.

     கூட்டணி கட்சி

    கூட்டணி கட்சி

    கூட்டணி கட்சியிலும் பாஜக, தேமுதிக, பாமக, உள்ளிட்ட கட்சிகளும் இதே சென்னையைதான் பெரும்பாலும் குறி வைக்கின்றன. அதனால் சென்னை யாருக்கு போக போகிறது என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. எனினும், அதிமுகவோ, கூட்டணி கட்சியோ.. யாராக இருந்தாலும் சரி, அந்த வேட்பாளர் திமுகவுக்கு செம டஃப் கொடுக்க கூடியவராகத்தான் இருக்க வேண்டும் என்று மட்டும் எடப்பாடியார் உறுதியாக இருக்கிறாராம். எப்படியும், துணை முதல்வர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் இது பற்றின இறுதியான முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

    English summary
    heavy competition for chennai mayor post in aiaidmk and serious discussion is going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X