• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மொத்தம் 7 போஸ்ட்.. சசிகலா புஷ்பாவை விடுங்க.. காயத்ரி ரகுராமும் களம் குதித்தார்.. லக் யாருக்கு?

Google Oneindia Tamil News

சென்னை: சொன்னால் நம்ப மாட்டீங்க.. எதிர்பார்க்காதவர்கள் எல்லாம் தமிழக பாஜகவின் பதவியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறார்கள்.. சசிகலா புஷ்பாவை விடுங்க... காயத்ரி ரகுராம்கூட இந்த லிஸ்ட்டில் உள்ளாராம்!

நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டிருந்த தமிழக பாஜகவுக்கு எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுவிட்டார்.. எச்.ராஜா, வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், நயினார் நாகேந்திரன் என சீனியர்கள் எல்லாம் வரிசை கட்டி நின்றனர்.

கட்சி தலைமை, மூத்த நிர்வாகிகள் என தங்கள் சார்பாக அனைத்து அழுத்தங்களையும் தந்தனர்.. இவர்கள் எல்லோருமே தமிழகத்துக்கு பரிச்சயமானவர்கள்... எல்லாருமே அரசியல் அனுபவம் பெற்றவர்கள்.. யாரையும் லேசில் எடைபோட்டுவிட முடியாது.

தலைவர் நியமனம்

தலைவர் நியமனம்

ஆனாலும் பாஜக தலைமை தற்போது நிலவும் அரசியல் சூழலுக்கேற்ப, வாக்குகளை குறி வைத்து, கனகச்சிதமாக தலித் தலைவரை நியமனம் செய்துள்ளது.. இதனால் தலைமை பதவியை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் எல்லாருமே கொஞ்சம் அப்செட்தான் என்கிறார்கள்.. இதில் எஸ்வி சேகரும் அடக்கம்! இதையடுத்து மற்ற பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது.

நிர்வாகிகள்

நிர்வாகிகள்

தலைமை மட்டும் முடிவான நிலையில், தலைமை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.. அதேபோல துணை தலைவர், பொதுச்செயலாளர் என முக்கிய பொறுப்புகளிலும் நியமனம் நடைபெற உள்ளது.. இந்த பதவிக்குதான் பல போட்டா போட்டி நடக்கிறது.. ஆனால் கட்சி தலைமையோ, நிர்வாகிகளும் புதுசாகவே தேர்ந்தெடுக்கப்படலாம் என்றே யோசித்து வருகிறதாம்.

கருப்பு முருகானந்தம்

கருப்பு முருகானந்தம்

அந்த பதவிகளுக்கு குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் 7 பொது செயலாளர் பதவிக்கு முன்னாள் எம்பி நரசிம்மன், கருப்பு முருகானந்தம், கரு.நாகராஜன், விக்டோரியா கௌரி ஆகியோர் முயன்றுவருவதாக தெரிகிறது. இதைதவிர, 8 துணை தலைவர்கள் பதவிகள் நிரப்பப்பட இருப்பதால், அதற்கும் ஏகப்பட்டோர் லிஸ்ட்டில் உள்ளனர்.. இதில் முதலாவதாக இருப்பவர் சசிகலா புஷ்பாதான்.

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

இதையடுத்து எம்எல்ஏ ரவிராஜ், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் முயன்று வருகின்றனர்... தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் 10 செயலாளர் பதவிகளுக்கும் சிலர் போட்டியில் உள்ளனர்.. இந்த லிஸ்ட்தான் ஆச்சரியம்.. நடிகை காயத்ரி ரகுராம், கேடி ராகவன் போன்றோர் உள்ளனராம்.. தற்போது அனுமானத்தில் சொல்லப்படும் இந்த லிஸ்ட்டில் சீனியர்கள் என்றால் கருப்பு முருகானந்தம், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் இருப்பதால் இவர்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்கிறார்கள்.

பாஜக உத்தி

பாஜக உத்தி

ஆனால் சசிகலா புஷ்பாவுக்கு முக்கிய பதவி ஒன்று தரப்போவதாக ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில், எப்படியும் அவரது பெயரும் டிக் ஆகலாம் என்கிறார்கள்.. ஒருவேளை சசிகலா புஷ்பா தேர்வானால் முழுக்க முழுக்க நாடார் ஓட்டுக்களை அள்ளுவதற்கான பாஜகவின் மற்றொரு உக்தியாகவும் இருக்கலாம்.. ஆனால் காயத்ரி ரகுராம் பெயர் எதற்காக அடிபடுகிறது என்று தெரியவிலை. இவர் கட்சியில் உறுப்பினரே இல்லை என்று ஒருமுறை தமிழிசை சவுந்தராஜன் சொல்லி இருந்தார்.

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

ஆனால் தீவிர பாஜக ஆதரவாளர்.. ட்விட்டரில் விசிகவினரை ஒரண்டை இழுப்பதே இவருக்கு பிரதானமான வேலை.. சாதீய ரீதியான புள்ளிகள், தலைவர்களுடன் மோதியே தனது பப்ளிசிட்டியை தேடி கொள்பவர் என்ற பெயரும் காயத்ரி மீது உள்ளது.. எனினும் இவருக்கு எதிர்பார்க்கும் பதவி கிடைக்குமா என தெரியவில்லை.. எப்படியோ ஆளாளுக்கு அழுத்தம் தந்து வருவதால் பாஜக யாரை டிக் செய்து அந்தந்த பொறுப்புகளில் அறிவிக்க போகிறதோ என்பது பெரும்பாடுதான்!

English summary
heavy competition in tn bjp executive and treasurer post
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X